தமிழக அரசின் சட்டத் திருத்ததை திருப்பி அனுப்பிய கலாம்
சென்னை:
கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் நீதிமன்றக் காவலை 15 நாட்களில் இருந்து 30 நாட்களாகஅதிகரித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்துக்கு ஜனாதிபதி அப்துல் கலாம் ஒப்புதல் தரமறுத்துவிட்டார்.
இதையடுத்து அந்தச் சட்டத் திருத்த மசோதா ஆளுநர் ராம்மோகன் ராவ் மூலமாக சட்டமன்ற சபாநாயகர்காளிமுத்துவுக்கு திரும்ப வந்துவிட்டது.
இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்குகளில் கைதானவர்களை ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இதை 30 நாட்களாக உயர்த்தி கடந்த 2002ம் ஆண்டில் தமிழகசட்டமன்றத்தில் அதிமுக அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றியது.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கோரி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்குஆளுநர் அனுப்பி வைத்தார். ஆனால், இதற்கு ஒப்புதல் தர ஜனாதிபதி அப்துல் கலாம் மறுத்துவிட்டார்.இதையடுத்து ஆளுநர் மூலமாகவே இந்த மசோதா சபாநாயகர் காளிமுத்துவுக்கு திரும்ப வந்துவிட்டது.
இந்த சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு கலாம் கருத்துத் தெரிவித்துள்ளதாக ஆளுநர் தனது குறிப்பில்கூறியுள்ளார்.
கலாம் நாளை சென்னை வருகை
இதற்கிடையே ஜனாதிபதி அப்துல் கலாம் ஒரு நாள் பயணமாக நாளை சென்னை வருகிறார்.
பிற்பகல் 2.30 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வரும் அவர், மேற்கு மாம்பலத்தில் உள்ள பொது சுகாதாரமையத்தை அவர் பார்வையிடுகிறார். பிறகு சென்னை அருகே உள்ள மதுரவாயலில் உள்ள தனியார் பொறியியல்கல்லூரிக்கு செல்கிறார்.
அங்கிருந்து சென்னை மியூசிக் அகாடமி சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 6மணிக்கு அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சிக் கழக பொன்விழாவைத் தொடங்கி வைத்துவிட்டு டெல்லிதிரும்புகிறார்.
கலாமின் வருகையையொட்டி சென்னை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications