சோனியாவை குறி வைத்தே பிரச்சாரம்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
வெளிநாட்டவரான சோனியா காந்தி பிரதமராகக் கூடாது என்ற வாதத்தை ஆணித்தரமாக முன் வைத்தேநாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்கள் நேற்று மாலை சென்னை அருகே உள்ள கொளப்பாக்கத்தில்நடந்தன. இக் கூட்டத்திற்கு நிதியமைச்சரும், அதிமுக அவைத் தலைவருமான பொன்னையன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில், அதிமுகவினருக்கு தேர்தல் தொடர்பான பல்வேறு உத்தரவுகளைவழங்கினார். ஜெயலலிதாவின் பேச்சு விவரம்:
காங்கிரஸ்தான் நமது முக்கிய எதிரி. அக்கட்சி மீது இரு முனைத் தாக்குதல் தொடுக்க வேண்டும். காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்ற வாதத்தை மக்கள் மத்தியில் ஆணித்தரமாக எடுத்து வைக்கவேண்டும்.
சோனியாவையும், வாஜ்பாயியையும் ஒப்பிட்டு சோனியாவை விட வாஜ்பாய் சிறந்தவர் என்ற ரீதியில் பிரசாரம்அமைய வேண்டும்.
இந்தியாவை இந்தியர்தான் ஆள வேண்டும். அப்படிப் பார்க்கையில் வாஜ்பாய்தான் தற்போதைக்கு சிறந்த பிரதமர்.இதன் காரணமாகத்தான் பா.ஜ.க.வுடன் நமது கட்சி கூட்டணி வைத்துள்ளது.
இதேபோல, காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புனிதமற்ற, சந்தர்ப்பவாத உறவையும் மக்கள்மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், திமுகவுக்கும், மதிமுகவுக்கும் தொடர்பு இருப்பதாக ஜெயின் கமிஷன் இடைக்காலஅறிக்கையில் கூறப்பட்டபோது, குஜ்ரால் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசில் இடம் பெற்றிருந்த திமுகஅமைச்சரை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியது. அதை நிறைவேற்றாததால் தான் குஜ்ரால் ஆட்சியையேகாங்கிரஸ் கவிழ்த்தது.
அதே காங்கிரஸ்தான் இப்போது திமுக, மதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஜெயின் கமிஷனின் இறுதிஅறிக்கையில் திமுக, மதிமுக மீது புகார் கூறப்படவில்லை என்று காங்கிரஸ் கூறுவது வெறும் சப்பைக்கட்டு.
இறுதி அறிக்கையில் திமுகவும் மதிமுகவும் விடுவிக்கப்பட்டதாக காங்கிரஸ் கூறினாலும், விடுதலைப் புலிகளுக்கும்இந்த இரு கட்சிகளுக்கும் உள்ள உறவை நாடறியும்.
ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமானவர்களுடன் சோனியா கை கோர்த்திருப்பது அவமானகரமானது. இதைமக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது கொள்கை இல்லாத கூட்டணி.
இதையும் மக்களிடம் அதிமுக தொண்டர்கள் விளக்கி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றார் ஜெயலலிதா.
முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி எடுக்க வேண்டிய நிலை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழுஅதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பொன்னையனின் அவைத் தலைவர் பதவிக் காலத்தை நீட்டித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சோனியாவைத் தாக்கியே பிரச்சாரம் அமைய வேண்டும் என்பது துணைப் பிரதமர் அத்வானியால் அதிமுகவுக்குத்தரப்பட்ட அட்வைஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications