நாளை வெளியே வருகிறார் வைகோ: உடல் நலம் பாதிப்பு
பூந்தமல்லி:
பொடா நீதிமன்றம் இன்று வைகோவுக்கு ஜாமீன் உத்தரவை வழங்கியது. இதையடுத்து அவர் நாளை சிறையில்இருந்து விடுதலையாகிறார்.
முன்னதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு இன்று நீதிமன்றத்துக்கு வர முடியாத அளவுக்கு அவரதுஉடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிறையிலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போதுஅவர் உடல் நலம் தேறி வருவதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்று நீதிமன்றம் வந்தபோதே வைகோ, வாந்தி எடுத்தவாறே மயங்கி சரிந்தார். கடந்த சில நாட்களாகவேசிறையில் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளார் வைகோ. இந் நிலையிலும் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகிவந்தார்.
நேற்று நீதிமன்றத்துக்கு வந்த அவர் ஜாமீன் தொடர்பான உறுதிமொழிகளை அளித்தார். அப்போது மிகவும்களைத்துப் போய் காணப்பட்டார். இந் நிலையில் பகல் உணவுக்காக நீதிமன்றத்தில் ஒரு அறைக்குச் சென்றார்வைகோ. அங்கு கட்சியினர் கொடுத்த உணவை வேண்டாம் வாங்க மறுத்துவிட்டார் வைகோ.
வேலூர் சிறையில் இருந்து கொண்டு வரப்பட்ட எலுமிச்சை சாதத்தையே உண்டார். அதைச் சாப்பிட்ட சிறிதுநேரத்தில் வைகோவுக்கு வாந்தி ஏற்பட்டது.
வாந்தி எடுத்த களைப்பில் மயங்கிய வைகோ அங்கிருந்த ஒரு பெஞ்சில் சரிந்தார். படுத்திருந்த அவருக்குவியர்த்துக் கொட்டியதால் மின் விசிறி கொண்டு வந்து வைக்கப்பட்டது. வெந்நீரைக் குடித்துவிட்டு படுத்துவிட்டார்.
பின்னர் மீண்டும் நீதிமன்ற விசாரணை நடக்க ஆரம்பித்தவுடன் வைகோ அழைத்து வரப்பட்டார். மிகவும்சோர்வுடன் காணப்பட்ட அவரை நீதிபதி தொடர்ந்து ஓய்வெடுக்கச் சொன்னார்.
வேலூர் செல்லும் நிலையில் வைகோவின் உடல் நிலை சரி இல்லாவிட்டால் சென்னையிலேயே அவருக்கு சிகிச்சைதரலாம் எனவும் நீதிபதி கூறினார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட வைகோ வேலூர் சிறைக்குச் செல்லத் தயார்என்று கூறிவிட்டு சோர்வாகவே வேனில் ஏறிவிட்டார்.
இந் நிலையில் இன்று அவர் ஜாமீன் தொகையைக் கட்ட நீதிமன்றம் வர வேண்டி இருந்தது. ஆனால், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்து வரவில்லை. அவருக்கு சிறையிலேயேசிகிச்சை தரப்பட்டு வருகிறது.
இன்று மாலை பொடா நீதிபதி ராஜேந்திரன் முறைப்படி வைகோவை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.இந்த உத்தரவுடன் அவரது வழக்கறிஞர் நன்மாறன் வேலூர் விரைந்தார். உத்தரவு இன்று இரவே வேலூர் மத்தியசிறை அதிகாரிகளிடம் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாளை காலை வைகோ சிறையிலிருந்து விடுதலைசெய்யப்படுகிறார்.
19 மாத பொடா கொடுமைக்குப் பின் வைகோ சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவதால், சிறை வாசலில்அவருக்கு வரவேற்பு கொடுக்கவும், சென்னை மாநகர எல்லையில் திமுகவினருடன் இணைந்து பிரமாண்டவரவேற்பு கொடுக்கவும் மதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துவிட்டு அவர் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்குச்செல்வார் என்று தெரிகிறது. கலிங்கப்பட்டியில் மாபெரும் வைகோவை வரவேற்பு தரவும் பொதுக் கூட்டத்துக்கும்அந்த ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில் வைகோ உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால், விடுதலை செய்யப்பட்ட பின்னர் சென்னையில்உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்.. டீசல் விலை உயர்வு வேலையை காட்ட துவங்கியது! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!











Click it and Unblock the Notifications