பா.ஜ.கவுக்கு தொகுதிகள் தயார்!
சென்னை:
பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 தொகுதிகளை அக்கட்சிக்கு அதிமுக தெரிவித்து விட்டது. ஆனால்புதுக்கோட்டை தொடர்பாக பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் உடன்பாடு எட்டப்படாமல் இழுத்துக்கொண்டு போகிறது.
திமுக கைவிட்டு விட்ட நிலையில், பா.ம.கவும், மதிமுகவும் திமுகவின் பக்கம் போய் விட்டதால், தனித்து விடப்பட்டபா.ஜ.க. வேறு வழியின்றி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக அமைச்சர்கள் பொன்னையன், ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார் ஆகியோர்அடங்கிய அதிமுக தேர்தல் குழுவும், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், சுகுமாறன் நம்பியார் ஆகியோர்அடங்கிய பா.ஜ.க. குழுவும் இதுவரை 3 முறை சந்தித்துப் பேசியுள்ளன. ஆனால் உடன்பாடு எட்டப்படாமல்இழுபறி நிலவுகிறது.
பா.ஜ.க. கேட்கும் 10 தொகுதிகளைத் தர அதிமுக மறுத்து விட்டது. 6 தொகுதிகள்தான் தர முடியும். புதுக்கோட்டைதொகுதியைத் தர முடியாது என்று முதலில் அதிமுக தெரிவித்தது. ஆனால் புதுக்கோட்டை கண்டிப்பாக வேண்டும்என்று பா.ஜ.க. தரப்பு வலியுறுத்தியது.
இருப்பினும் தனது முடிவில் கொஞ்சமும் தளராத அதிமுக, வேண்டுமானால் 7 தொகுதியாக தருகிறோம். ஆனால்புதுக்கோட்டையை மட்டும் கேட்கவே கேட்காதீர்கள் என்று கூறி விட்டது அதிமுக.
இதற்கு அதிமுக கூறும் காரணங்கள்: கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 4 தொகுதிகளையும், கூடுதலாக 3தொகுதிகளையும் தருகிறோம். ஆனால் புதுக்கோட்டை தொகுதி அதிமுக தொகுதி. எனவே அதை தர முடியாதுஎன்று அதிமுக தரப்பு கூறி வருகிறது.
புதுக்கோட்டையை இழந்தால் திருநாவுக்கரசரையும் இழக்க வேண்டி வருமே என்று பா.ஜ.க. பயப்படுவதால்,தொடர்ந்து புதுக்கோட்டை வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது.
இதற்கிடையே, திருச்சி, கோவை, நாகர்கோவில், நீலகிரி (கடந்த முறை பா.ஜ.க. வென்ற தொகுதிகள்) தவிர தென்சென்னை, தென்காசி, மயிலாடுதுறைஆகிய தொகுதிகளைக் கூடுதலாக ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளது. இதுதொடர்பாக பா.ஜ.க.வுக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதற்கு மேல் இறங்கி வர முடியாது என்றும் அதிமுகதிட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில் திருநாவுக்கரசை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் ஒரு பிரிவு தீவிரமாகியுள்ளது.புதுக்கோட்டைஇல்லாவிட்டால் என்ன, அருகில் உள்ள திருச்சியில் போட்டியிடலாமே என்று அவர்கள்திருநாவுக்கரசரை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் போட்டியிட்டால் புதுக்கோட்டைதான், இல்லாவிட்டால்என்னை விட்டு விடுங்கள் என்று திட்டவட்டமாக கூறி வருகிறாராம் திருநாவுக்கரசர்.
இதனால் பா.ஜ.க. தரப்பு குழம்பிப் போயுள்ளது. தங்களது நிலையை மேலிடத்திற்குத் தெரிவித்துள்ள தமிழகபா.ஜ.க. மேலிடத் தலைவர்களில் யாரையாவது ஒருவரை அனுப்பி வைத்து ஜெயலலிதாவுடன் நேரடியாகபேசுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications