தேர்தல் பிரச்சாரத்துக்கு அத்வானிக்கு ராணுவ விமானம்: கருணாநிதி ஆதரவு
சென்னை:
பாதுகாப்பு காரணங்களுக்காக துணைப் பிரதமர் அத்வானி தனி விமானத்தைப் பயன்படுத்துவதை ஆட்சேபிக்கவேண்டியதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் வாஜ்பாய்க்கு இணையாக துணைப் பிரதமர் அத்வானிக்கும் இந்திய விமானப்படை விமானத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் பா.ஜ.க. கோரிக்கைவிடுத்துள்ளது.
அரசியல் சட்டப்படி துணைப் பிரதமர் என்ற பதவியே இந்தியாவில் இல்லை என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சி,பா.ஜ.கவின் இக் கோரிக்க்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந் நிலையில் அத்வானிக்கு விமானப் படைவிமானம் தருவதில் தவறேதும் இல்லை என கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணைப் பிரதமர் அத்வானி தேர்தல் பிரசாரத்திற்காக தனிவிமானப் படை விமானத்தை பயன்படுத்துவதற்கு சில கட்சிகள் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு என்ற கோணத்தில் பார்க்கும்போது, அத்வானி ராணுவ விமானத்தை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதைதிமுக பிரச்சனையாக்க விரும்பவில்லை. அத்வானிக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்ற கோணத்தில் சிந்தித்துப்பார்த்தால், அதில் திமுகவுக்கு உடன்பாடு உண்டு.
அரசு விளம்பரங்கள் என்ற பெயரில் மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் பா.ஜ.க. அரசு செலவழிப்பதை விடவிமான பயணத்திற்கான செலவு குறைவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications