சொத்து குவிப்பு வழக்கு: ஜெயாவின் மனு தள்ளுபடி-உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி:
முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளை பெங்களூரில் இருந்து வேறுமாநிலத்துக்கு மாற்றக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
வருமானத்தை மீறி ஜெயலலிதா, சசிகலா, தினகரன் ஆகியோர் ரூ. 67 கோடி சொத்து குவித்தது தொடர்பான இருவழக்குகள் சென்னை தனி நீதிமன்றத்தில் கேலிக் கூத்தான நிலையில் விசாரிக்கப்பட்டன.
ஜெயலலிதா வீட்டில் இருந்தவாரே நீதிமன்றத்தில் கேள்விகளுக்கு பதில் அனுப்பினார். விசாரணை செய்யவேண்டிய அரசு வழக்கறிஞரோ ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் போல செயல்பட்டார்.
இதையடுத்து இந்த வழக்குகளை தமிழகத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற திமுக பொதுச் செயலாளர்அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவை மிகக்கடுமையாக கண்டித்தது. விசாரணை நடந்த முறையையும் வன்மையாக கண்டித்த நீதிபதிகள் வரியவா, சேமாஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் வழக்குகளை கடந்த நவம்பர் 18ம் தேதி கர்நாடகத்துக்கு மாற்றியது.
இதையடுத்து பெங்களூரில் இதற்காக தனி நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. தமிழில் உள்ள வழக்கு ஆவணங்கள்கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. சிறப்பு நீதிபதி, சிறப்பு அரசு வழக்கறிஞரையும் நியமிக்ககர்நாடகம் தயாரான நிலையில், இந்த வழக்கை அங்கிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி ஜெயலலிதாவின்சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
காவிரி, வீரப்பன் விவகாரங்களால் தமிழகம்-கர்நாடகம் இடையே நல்லுறவு இல்லாத நிலையில் இந்த வழக்குஅங்கு நியாயமாக விசாரிக்கப்படாது என்றும், தனக்கு அங்கு பாதுகாப்பு இருக்காது என்றும் மனுவில் ஜெயலலிதாகூறியிருந்தார். இதனால் வழக்குகளை ஆந்திரா, கேரளா அல்லது பாண்டிச்சேரிக்கு மாற்ற வேண்டும் என்றும்கோரியிருந்தார்.
இந்த மனுவும் நீதிபதிகள் வரியவா, சேமா ஆகியோரிடமே விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் மனுவையும்அது தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த எதிர் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 9ம் தேதி, தேதிகுறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந் நிலையில் இன்று அவர்கள் தீர்ப்பை வழங்கினர்.
தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:
இந்த வழக்கில் நாங்கள் முன்பே கூறிய தீர்ப்பை திருத்த வேண்டிய அவசியமே எழவில்லை. இதனால்ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்கிறோம். ஜெயலலிதா, சசிகலா, தினகரனுக்கு எதிரான வழக்குகளின்விசாரணை பெங்களூரில் தான் நடைபெறும். அங்கு விசாரணை நேர்மையாக நடக்கும் என்பதில் எங்களுக்குஎள்ளவும் சந்தேகமில்லை என்று கூறினர்.
கர்நாடகத்தில் தனக்கு பாதுகாப்பு இருக்காது என்று கூறும் ஜெயலலிதா, தனது தோழி சசிகலா சகிதமாக, தனதுசொந்த ஊரான மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு பலமுறை சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications