மார்ச் 1 முதல் ஏப்ரல் 14 வரை ஜெயலலிதா சூறாவளி பிரச்சாரம்
சென்னை:
முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மார்ச் 1ம் தேதி முதல் தீவிர தேர்தல் பிரசாரத்தைத்தொடங்குகிறார்.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக, பா.ஜ.க. வேட்பாளர்களுக்காகஜெயலலிதா பிரசாரம் செய்யவுள்ளார். மார்ச் 1ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் இருந்து அவரது பிரச்சாரப்பயணம் தொடங்குகிறது.
இந்தப் பிரச்சாரப் பயணத் திட்டத்தை தேர்தல் ஸ்பெஷலிஸ்டான செங்கோட்டையன் இரவு, பகலாககட்சியினருடன் பேசி, ஆய்வுகள் நடத்தி தயார் செய்து கொடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் பிரச்சாரத் திட்டம்:
சென்னையிலிருந்து போரூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் செல்லும் அவர் இரவில் காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
3ம் தேதி காவேரிப்பாக்கம், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு செல்லும் ஜெயலலிதா வேலூரில் நடக்கும்பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
4ம் தேதி வேலூரிலிருந்து கண்ணமங்கலம், சந்தைவாசல், போளூர், கலசப்பாக்கம் திருவண்ணாமலை செல்லும்ஜெயலலிதா அங்கு பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
6ம் தேதி திருப்பத்தூரில் முக்கிய சாலைகளில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்திலும், காவேரிப்பட்டனம் பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார்.
7ம் தேதி முக்கிய சாலைகளில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு தர்மபுரியில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும்,சேலத்திலும் சாலை வழி பிரச்சாரமும் பின்னர் பொதுக் கூட்டமும் உண்டு.
9ம் தேதி நாமக்கல்லில் தெருக்களில் பிரச்சாரம், தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். பின்னர்திருச்செங்கோடு பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார்.
10ம் தேதி கோபிச் செட்டிப்பாளையத்தில் சாலைகளில் பிரச்சாரம், பொதுக் கூட்டம். இங்கு காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் நிற்பதால் பிரச்சாரத்திற்கு அதிக நேரம் ஒதுக்குகிறார்.
12ம் தேதி அவினாசி பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் கோவை தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கால்மண்டபத்தில் பொதுக் கூட்டம்.
13ம் தேதி பொள்ளாச்சியிலும், பழனியிலும் முக்கிய சாலைகளில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு இருஊர்களிலும் பொதுக் கூட்டம்.
15ம் தேதி கரூரில் பிரச்சாரம் பிளஸ் பொதுக் கூட்டம்.
16ம் தேதி பெரம்பலூர் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
18ம் தேதி விழுப்புரத்தில் பிரச்சார நெடும் பயணம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
19ம் தேதி விழுப்புரம்-மதுராந்தகம் இடையே வேன் பிரசாரம் செய்கிறார். மதுராந்தகம்-செங்கல்பட்டுஇடையேயும் அவர் வேன் மூலம் பிரசாரம் செய்கிறார்.
21ம் தேதி திருவள்ளூரில் பொதுக் கூட்டத்திலும், அரக்கோணத்தில் பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார்.
22ம் தேதி சென்னை நகரத் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். தென் சென்னையில் ஆரம்பித்து மத்தியசென்னையில் வேன் மூலம் பிரசாரத்தை முடிக்கும் அவர் 24ம் தேதி மத்திய சென்னையில் ஆரம்பித்து வடசென்னையில் முடிக்கிறார்.
25ம் தேதி பாண்டிச்சேரி பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் கடலூரில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும்ஜெயலலிதா பேசுகிறார்.
27ம் தேதி மயிலாடுதுறையில் பிரச்சாரம் அடுத்ததாக பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
28ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.அன்றே தஞ்சையில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும் பேசவுள்ளார்.
30ம் தேதி புதுக்கோட்டையில் பிரச்சாரம் மற்றும் பொதுக் கூட்டம்.
31ம் தேதி திருச்சியில் பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார்.
ஏப்ரல் மாதத்தில்...:
ஏப்ரல் 2ம் தேதி திண்டுக்கல்லில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் ஜெயலலிதா.
3ம் தேதி தேனி பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
5ம் தேதி தேனியிலிருந்து ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, பேரையூர், திருமங்கலம் வரை வேனில் சென்று பிரசாரம்செய்கிறார்.
6ம் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் மானாமதுரை, கதக்குடி, பரமக்குடிவழியாக அவர் ராமநாதபுரம் செல்கிறார்.
8ம் தேதி ராமநாதபுரத்தில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
9ம் தேதி காரைக்குடியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
11ம் தேதி சிவகாசியில் பொதுக் கூட்டம்
12ம் தேதி தென்காசி பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
13ம் தேதி திருநெல்வேலி, நாகர்கோவிலிலில் பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்.
14ம் தேதி திருச்செந்தூர் பொதுக்கூட்டத்தில் பேசுவதோடு ஜெயலலிதாவின் பிரசாரம் முடிவடைகிறது.
மார்ச் 1ம் தேதி பிரசாரம் தொடங்கப்படுவதால், இந்த மாத இறுதிக்குள் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்வெளியிடப்பட்டு விடும்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications