பாண்டிச்சேரியில் லலிதா குமாரமங்கலம் போட்டி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சே மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் லலிதா குமாரமங்கலம் போட்டியிடுகிறார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலத்தின் மகளும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரியுமான லலிதா குமாரமங்கலம், தற்போது அகில இந்திய பா.ஜ.க.செயலாளராக உள்ளார்.
அத்தோடு பாண்டிச்சேரி மாநில பா.ஜ.க. பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். மயிலாடுதுறை அல்லதுபாண்டிச்சேரி தொகுதியில் ஏதாவது ஒன்றில் போட்டியிடும் திட்டத்துடன் கடந்த சில ஆண்டுகளாக இந்த இருஇடங்களிலும் பொதுச் சேவைகளில் ஈடுபட்டு வந்தார்.
இந் நிலையில் பாண்டிச்சேரியை லலிதாவுக்காக ஒதுக்கித் தந்தார் முதல்வர் ஜெயலலிதா.
பா.ஜ.க. வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை மாநிலத் தலைவர்கள் இப்போது தான் ஆலோசனையேநடத்த ஆரம்பித்துள்ள நிலையில் லலிதாவுக்கு மத்தியத் தலைமை சீட் ஒதுக்கிவிட்டது. இத் தகவலை லலிதாவேநிருபர்களிடம் தெரிவித்தார்.
பாண்டிச்சேரியில் நான் தான் போட்டியிடப் போகிறேன். இதற்கான முறையான அறிவிப்பை கட்சித் தலைவர்வெங்கைய்யா நாயுடு விரைவில் வெளியிடுவார்.
புதுச்சேரிக்கு நான் புதியவள் அல்ல. எனது தந்தை மோகன் குமாரமங்கலம் கடந்த 1971ம் ஆண்டு முதல் 73ம்ஆண்டு வரை புதுவை எம்.பியாக இருந்துள்ளார். மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
திங்கள்கிழமை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தேர்தல் பிரசாரம் தொடர்பாக விவாதிக்கவுள்ளேன்.
பாமக எங்களுக்கு ஒரு மிரட்டலே அல்ல. பாமக வேட்பாளரை எளிதில் தோற்கடிப்போம். பாண்டிச்சேக்கு எனதனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இந்தத் தேர்தல் அறிக்கையை பா.ஜக மற்றும் அதிமுக இணைந்துவெளியிடும் என்றார் அவர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications