மார்ச் 3ல் மகாமகம்: காவிரியில் நீர் திறப்பு- சிறப்பு ரயில்கள்
கும்பகோணம்:
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகத் திருவிழா வரும் மார்ச் 3ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்துஅங்கு மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவிழாவையொட்டி வரும் 26ம் தேதி முதல் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்கவுள்ளது.
திருவிழாவையொட்டி பக்தர்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய மேட்டூர் அணையில் இருந்து காவிரியில்தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி வரை 3,456 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படும்.இந்த நீர் மார்ச் 2ம் தேதி கும்பகோணத்தை அடையும்.
கும்பகோணம் மகாமகக் குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தி அதில் உள்ள தீர்த்தங்களில் லாரிகள் மூலம் நீரைநிரப்பும் பணியும் மிக வேகமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த முறை முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் பலர் உடல் நசுங்கிப் பலியாயினர்.
இதனால் இம்முறை பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. மகாமகக் குளத்தில்நிரப்புவதற்காக வட மாநில புண்ணிய நதிகளின் நீரைக் கொண்டு வரும் பணி நடிகர் ரஜினியிடம் காஞ்சி மடத்தால்ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இம் மாதம் 25ம் தேதி தொடங்கும் இந்த விழா மார்ச் 8ம் தேதி நிறைவடைகிறது. பிரசித்தி பெற்ற மகாமகத் நீராடல்நிகழ்ச்சி 3ம் தேதி நடக்கிறது.
இதில் ஜெயலலிதாவும் ரஜினியும் பங்கேற்பதால் அதிமுக தொண்டர்கள், ரஜினி ரசிகர்களும் பெரும்எண்ணிக்கையில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்தநிகழ்ச்சியில் இந்தக் கூட்டத்தையும் எப்படிச் சமாளிப்பது என்று மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறதுதஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம்.
சிறப்பு ரயில்கள்:
இந் நிலையில் மகாமகத்தில் பங்கேற்கச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து சிறப்புரயில்கள் இயக்கப்படவுள்ளன.
வரும் 27ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. தினமும் இரவு 11மணிக்குதாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் காலை 8.15 மணிக்கு கும்பகோணம் சென்றடையும்.
கும்பகோணத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம்வந்தடையும். இதற்கான முன் பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.
மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, சிதம்பரம், கடலூர், பண்டுருட்டி, விழுப்புரம், திண்டிவனம்,மேல்மருத்துவத்தூர், செங்கல்பட்டில் இந்த ரயில் நின்று செல்லும்.
அதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகளும்கும்பகோணத்துக்கு இயக்கப்படவுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications