63 வயதில் குழந்தை பெற்ற ஈரோடு பெண்மணி!!
ஈரோடு:
ஈரோட்டைச் சேர்ந்த 63 வயது பெண்மணிக்கு செயற்கை கருத்தரிப்பு முறையில் அழகான ஆண் குழந்தைபிறந்துள்ளது. குழந்தையின் தந்தைக்கு 74 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்குத் திருமணமாகி 45ஆண்டுகளாகிறது. இருப்பினும் குழந்தைகள்இல்லை. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதற்காகசிகிச்சை எடுத்தும் பலன் இல்லை.
இந் நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாப்பாத்திக்கு சோதனை நடத்தப்பட்டது. பின்னர்இக்ஸி முறையில் சோதனைக் குழாயில் கரு உருவாக்கப்பட்டு பாப்பாத்தியின் கருப்பையில் செலுத்தப்பட்டது.
இதன் மூலம் தாய்மையடைந்த பாப்பாத்திக்கு நேற்று அறுவைச் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. நேற்றுசுப்பிரமணியத்திற்கு 74வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை ஆண்டுகள் கழித்து தனக்கு வாரிசு உருவாகியிருப்பது குறித்து சுப்பிரமணியம் அளவற்ற மகிழ்ச்சிதெரிவித்தார்.
பாப்பாத்திக்காக அவரது உறவினர் ஒரு கரு முட்டையை வழங்கினார். அதில் சுப்பிரமணியத்தின் விந்தணுசேர்க்கப்பட்டு கரு உருவானது. பின்னர் அந்தக் கரு பாப்பாத்தியின் கருப்பையில் வைக்கப்பட்டு குழந்தைஉருவானது.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications