முத்திரை தாள் மோசடி: சிபிசிஐடிக்கு எதிரான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடியில் தொடர்புடைய நிஜாமுதீனைக் கைது செய்யவும், அவரிடம் விசாரணைநடத்தவும் தமிழக சிபிசிஐடி போலீசார் தடையாக இருந்ததற்கான ஆதாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில்சமர்பிக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரம் கோடி போலி முத்திரைத்தாள் மோசடியை நடத்திய கர்நாடகத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் தெல்கியின்தமிழகக் கூட்டாளி தான் இந்த நிஜாமுதீன். தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரிடம் சிக்கிய இவனைத் தப்ப வைக்கசிபிசிஐடியின் ஐ.ஜி. அமித் வர்மா, டி.ஐ.ஜி. முகமது அலி ஆகியோர் முயன்றதற்கான ஆதாரம் இப்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவனைத் தப்ப வைப்பதற்காக பல லட்சத்தை இந்த இரு அதிகாரிகளும் லஞ்சமாகப் பெற்றதாகவும் அதில்கூறப்பட்டுள்ளது.
சிபிசிஐடி போலீசாருக்கு எதிராக வழக்கறிஞர் சுப்பிரமணியம் பாலாஜி என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நலமனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இதனை நீதிபதிகள் சிர்புர்கர், இப்ராகிம் கலீபுல்லாஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரிக்கிறது.
நேற்று இந்த பெஞ்சிடம் சுப்பிரமணியம் பாலாஜியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சந்துரு ஆஜராகி வாதாடினார்.அவர் கூறுகையில்,
போலி முத்திரைத் தாள் மோசடியில் தொடர்புடைய நிஜாமுதீனை முதலில் தமிழக சிபிசிஐடி போலீசார் கைதுசெய்தனர். ஆனால், அவரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு விட்டுவிட்டனர். மேலும் பல கோடி மதிப்புள்ள போலிமுத்திரைத் தாள்களையும் அவரிடமே திருப்பித் தந்துவிட்டனர்.
இதையடுத்துத் தான் கர்நாடக போலீசாரிடம் நிஜாமுதீன் சிக்கினார். சென்னையில் அவரது வீட்டில் சோதனைநடத்தி ரூ. 250 கோடி மதிப்புள்ள முத்திரைத் தாள்களைப் பறிமுத்ல் செய்தது கர்நாடக போலீஸ் படை.
ஆனாலும் இந்த போலி முத்திரைத் தாள் மோசடி குறித்து விசாரணை நடத்த சிபிசிஐடி தொடர்ந்துஇடைஞ்சலாகவே இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து வந்த சிபிசிஐடி டி.எஸ்.பிசெல்வராஜுக்கு மூத்த சிபிசிஐடி அதிகாரிகள் (அமித் வர்மா, முகமது அலி) தொடர்ந்து இடைஞ்சல் தந்து வந்தனர்.
(இந் நிலையில் செல்ராஜ் திடீரென இடம் மாற்றப்பட்டு நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப் பகுதிக்கு தூக்கிஅடிக்கப்பட்டுள்ளார். இதிலும் அமித் வர்மா, முகமது அலியின் கை இருப்பதாகத் தெரிகிறது.)
இது குறித்து சிபிசிஐடி எஸ்.பியாக இருந்த சந்தீப்ராய் ரத்தோர், சிபிசிஐடி கூடுதல் டிஜிபிக்கு புகார் கடிதம்அனுப்பியுள்ளார். அந்தப் புகார் கடிதத்தின் நகல் இங்கு (நீதிமன்றத்தில்) ஆதாரமாக சமர்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும், முகமது அலி மற்றும் அமித் வர்மா மீதும்சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார் வழக்கறிஞர் சந்துரு.
இதையடுத்து அரசின் சார்பில் பதில் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார் அட்வகேட் ஜெனரல் என்.ஆர்.சந்திரன். இதைத் தொடர்ந்து வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு (இன்று) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இன்று வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியபோது சந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்குப்பதிலாக ஆஜரான அரசு வழக்கறிஞரான ரகுபதி நீதிபதிகளிடம் கூறுகையில், சந்திரன் இன்று வேறு கோர்ட்டில்இருக்கிறார். சிறிது நேரத்தில் அவர் வந்துவிடுவார் என்றார்.
அப்படியெல்லாம் காத்திருக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தனர்.
இந்த பொது நல மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசின் உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா, டிஜிபிகோவிந்த், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி ரமணி, ஐ.சி. அமித் வர்மா, டிஐஜி முகமது அலி, எஸ்.பி. சந்தீப்ராய் ரத்தோர்,மற்றும் சிபிஐ இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனால் இந்த பலகோடி ஊழல் வழக்கில் தமிழக சிபிசிஐடி போலீஸ் குறிப்பாக ரமணி, அமித் வர்மா, முகமது அலிஆகியோர் சிக்கலில் மாட்டியுள்ளனர்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications