கும்பகோணம் மகாமக விழா துவங்கியது
கும்பகோணம்:
உலகப் பிரசித்தி பெற்ற கும்பகோணம் மகாமக விழா கோலாகலமாக தொடங்கியது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் விழாவையொட்டி மகாமகக் குளம் தூர் வாரப்பட்டு,புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில் இப்போது நீர் நிரப்பப்பட்டு வருகிறது. கணபதி வர பூஜையுடன் மகாமக விழாதொடங்கியது. இந்த பூஜையில் காஞ்சி சங்கராச்சாரியார் கலந்து கொண்டார்.
பூஜைக்குப் பின்னர் கொடியேற்றம் நிகழ்ச்சி காசி விஸ்வநாதர் கோவில், ஆதிகும்பேஸ்வரர் கோவில், நாகஸ்வரர்கோவில், அபிமுகேஸ்வரர் கோவில் ஆகிய புகழ் பெற்ற சிவன் கோவில்களில் நடைபெற்றது. காலை 9 மணிக்குகாஞ்சி சங்கராச்சாரியார் புனித நீராடினார். அதனையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
நாளை ஆதி சாரங்கபாணி, சக்கரபாணி, ஆதி வராகப் பெருமாள் மற்றும் ராமசாமி கோவில் உள்ளிட்ட 5வைணவக் கோவில்களில் கொடியேற்றப்படும்.
10 நாட்களுக்கு இந்த உற்சவம் நடைபெறும். சைவக் கோவில்களில் மார்ச் 6ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சிநடைபெறும். அன்று ஒருநாள் மட்டும் இந்தக் கோவில்களில் ஏக தின உற்சவம் நடைபெறும்.
அதே நாளில் 12 சிவன் கோவில்களிலிருந்து சுவாமிகள் மகாமக குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.மகாமகத்தையொட்டி கும்பகோணம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்குகுவிந்த வண்ணம் உள்ளனர்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications