பா.ஜ.க. வேட்பாளர் குழப்பத்தால் பிரச்சார பயணத்தை ஒத்திவைத்த ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா மார்ச் 1ம் தேதி தொடங்குவதாக இருந்த தனது தேர்தல் பிரசார பயணத்தை திடீர் என்றுஒத்திவைத்துள்ளார். கூட்டணிக் கட்சியான பா.ஜ.கவில் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில்சிக்கல் நிலவுவதால் ஜெயலலிதா இந்த முடிவை எடுத்துள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 33 தொகுதிகளிலும், பா.ஜ.க.7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.இதையடுத்து 33 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஜெயலலிதா அறிவித்தார். அதற்கு முன்பாகவே அவரதுதேர்தல் பிரசார பயணத் திட்டம் வெளியிடப்பட்டது.

மார்ச் 1ம் தேதி சென்னை தேனாம்பேட்டையிலிருந்து ஆரம்பித்து 45 நாள் தொடர் பிரச்சாரம் செய்து,திருச்செந்தூரில் தேர்தல் பயணத்தை முடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் திடீர் என்று ஜெயலலிதாவின் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

இருப்பினும் பா.ஜ.கவில் நிலவும் பிரச்சனைகளே இந்த ஒத்தி வைப்புக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.கோவையில் ராதாகிருஷ்ணன்ம், நாகர்கோவிலில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நீலகிரியில் மாஸ்டர் மாதன்போட்டியிடுவார்கள் என்று இன்று பா.ஜ.க. அறிவித்தது.

ஆனால், சிதம்பரம் (தனி), வட சென்னை, தர்மபுரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதற்கு பா.ஜ.கவில் யாருமேமுன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொஞ்சமாவது பிரபலமான ஆட்களை பா.ஜ.க தேடி வருகிறது.

தாங்கள் போட்டியிட தென் சென்னையும், சிவகங்கையும் கிடைக்காததால் இல.கணேசனும், எச்.ராஜாவும் கூட்டுசேர்ந்து கொண்டு தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பேசி வருவதால் தமிழக பா.ஜ.கவில் பெரும் குழப்பம்நிலவுகிறது. சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரு தரப்பினரும் வாடா, போடா என்று ஒருமையில்அழைத்து மோதலில் இறங்கியுள்ளனர்.

இதையடுத்தே நாயுடு சென்னை வந்தார். நேற்று ஜெயலலிதாவைச் சந்தித்த நாயுடு தனது கட்சியில் நிலவும்பிரச்சனை குறித்து விளக்கினார். அப்போது வட சென்னைக்குப் பதிலாக தென் சென்னையையும், தர்மபுரிக்குப்பதிலாக திருச்சியையும், சிதம்பரத்துக்குப் பதிலாக சிவகங்கையையும் தருமாறும் மீண்டும் அவர் கோரிககைவைத்தார். ஆனால், ஜெயலலிதா அதை ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இந் நிலையில் இப்போதே பிரச்சாரம் ஆரம்பித்தால், சிதம்பரம், வட சென்னை, தர்மபுரி தொகுதிகளில் பிரச்சாரம்செய்யும்போது பா.ஜ.க. வேட்பாளர் யார் என்பதைச் சொல்ல முடியாது என்பதால், தனது பிரச்சாரத்தை ஜெயலலிதாஒத்தி வைத்துள்ளார்.

இதற்கிடையே மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் சுகந்தனை கட்சிக்குள் இழுக்கபா.ஜ.க. முயன்று வருகிறது. வன்னியர்கள் மத்தியில் மிகச் செல்வாக்குடன் இருந்தவர் வாழப்பாடி என்பதால்சுகந்தன் கட்சிக்குள் வந்தால் தர்மபுரியில் நிற்க வைக்கலாம் என்று நினைக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+