அதிமுகவுடன் இனி ஒட்டோ, உறவே கிடையாது: ராமதாஸ்
சென்னை:
பா.ஜ.க. மற்றும் அதிமுகவுடன் எதிர்காலத்தில் ஒட்டோ, உறவோ கிடையாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர்ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணியில் இணையும் பா.ம.க. இன்று தனது நாடாளுமன்றத் தேர்தல்அறிக்கையை வெளியிட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், எதிர்காலத்தில் அதிமுகமற்றும் பா.ஜ.கவுடன் இனி ஒட்டோ, உறவோ வைத்துக் கொள்ள மாட்டோம் என்று அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், 13 மாதங்களில் வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்த அதிமுக இப்போதுமீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அப்போது 13 மாதங்கள் வாஜ்பாய் அரசை விட்டு வைத்தஜெயலலிதா, இந்த முறை தேவைப்பட்டால், 6 மாதங்களிலேயே கவிழ்க்கத் தயங்க மாட்டார்.
எதிர்காலத்தில் அதிமுகவுடனோ, பா.ஜ.கவுடனோ இனி ஒட்டோ, உறவோ வைத்துக் கொள்ள மாட்டோம்.
புதுவையில் நாங்கள் போட்டியிடுவதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும்பேச்சுக்கே இடமில்லை.
சோனியா காந்திதான் அடுத்த பிரதமர் என்ற கருத்தை நாங்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளோம்.அவருக்கே எங்களது முழு ஆதரவும். காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் அதில் சேருவது குறித்து அப்போதுமுடிவெடுக்கப்படும்.
புதுவை உள்ளிட்ட 40 எம்.பி. தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்ராமதாஸ்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications