ராஜிவ் கொலையில் திமுகவை குற்றம் சாட்டியதேயில்லை: காங்கிரஸ்
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுகவை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் குற்றம் சாட்டியதில்லைஎன்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கபில் சிபல் கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையில், ராஜீவ் கொலையில் சில அரசியல் கட்சிகளுக்குத்தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், இறுதி அறிக்கையில், திமுகவுக்கும் இவ்வழக்குக்கும் சம்பந்தம்இல்லை என்று தெளிவாக்கப்பட்டுவிட்டது.
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் மதிமுகவுடன் கூட்டணியா என்று கேட்கிறார்கள். புலிகளால் இந்தியாவுக்குஇருக்கும் அச்சுறுத்தலை விட, மதவாத சக்திகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலே மிக பயங்கரமானது. முதலில்களையப்பட வேண்டியது அதுவே.
தேர்தலில் எந்த கிரிமினல் குற்றச்சாட்டும் இல்லாதவரையே காங்கிரஸ் கட்சி நிறுத்தும். மத்தியில் பா.ஜ.க.அரசையும், தமிழகத்தில் அதிமுக ஆட்சியையும் நீக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச திட்டத்தின்படிதான்தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவோம். எங்கள் ஆட்சிஇருந்திருந்தால் தமிழகத்தில் ஜனனி போன்ற பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் நடந்திருக்காது.
பா.ஜ.கவும், சங் பரிவார் உள்ளிட்ட சில மதவாத அமைப்புகளும் இணைந்து நாட்டையே துண்டாட முயன்றுவருகின்றன. நாடாளுமன்றம் தாக்கப்பட்டது போன்ற வேதனைகள்தான் நடந்தனவே தவிர, சாதனைகள் ஏதும்பா.ஜ.க. அரசில் ஏற்படவில்லை என்றார் கபில் சிபல்.
ஜனனிக்கு உச்ச நீதிமன்றத்தில் வாதாடி ஜாமீன் பெற்றுத் தந்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications