பா.ஜ.கவில் நடிகை நக்மா: ஹைதராபாத்தில் போட்டி?
ஹைதராபாத்:
நடிகை ஜோதிகாவின் அக்காவான நடிகை நக்மா பா.ஜ.கவில் இணைந்து, ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடப்போவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத் முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் தொகுதியாகும். அங்கு மஜ்லிஸ் இத்காதுல் முஸ்லீமின் என்றஇஸ்லாமிய அமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. அந்தத் தொகுதியைக் கைப்பற்ற பா.ஜ.க விரும்புகிறது.அதற்காக புகழ் பெற்ற முஸ்லீம் பிரபலங்களை கட்சியில் சேர்த்து, அத் தொகுதியில் போட்டியிட செய்ய பா.ஜ.க.தலைவர் வெங்கைய்யா நாயுடு முயற்சித்து வருகிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை துணைத் தலைவருமான நஜ்மா ஹெப்துல்லா சமீபகாலமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரை பா.ஜ.க சார்பில்ஹைதராபாத் தொகுதியில் போட்டியிட வைப்பது குறித்து பா.ஜ.கவில் விவாதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு இந்துஅமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த யோசனை கைவிடப்பட்டது.
இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாரூத்தின் பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவரைகட்சியில் சேர்க்க தூது அனுப்பப்பட்டுள்ளது.
அசாரூத்தின் சம்மதிக்காத பட்சத்தில் நடிகை நக்மாவை போட்டியிடச் செய்வது என்று பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.இதற்காக நக்மாவை அணுகியபோது, அவரும் சம்மதித்துள்ளார். வெகு விரைவில் நக்மா பா.ஜ.க.வில் இணைந்து,ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பா.ஜ.கவில் சேர்ந்த நடிகை சுதா சந்திரன் மத்தியப் பிரதேசம் கந்துவாதொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications