கடலூர் அருகே மீனவர்கள் மோதல்: 3 பேருக்கு வெட்டு - போலீஸ் துப்பாக்கிச் சூடு
கடலூர்:
கடலூர் அருகே இரு பிரிவு மீனவர்களுக்கிடையே கடலில் ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டுவிழுந்தது. இதையடுத்து மீனவர் குப்பத்திலும் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீஸார் துப்பாக்கிச் சூடுநடத்தினர்.
கடலூர் அருகே உள்ளது தேவானம்பட்டனம் மீனவ கிராமம் ஆகும். இந்த கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இவர்களுக்கும் சாமியார்பேட்டை என்ற மீனவர் கிராமத்தைச்சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் தேவனாம்பட்டனம் மீனவர்கள் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து கரைத்துத் திரும்பியஇந்த மீனவர்கள் தங்களது ஊரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோருடன் சாமியார்பேட்டைக்குச் சென்றனர்.
ஆயுதங்களுடன் மீனவர்கள் சாமியார்பேட்டை கிராமத்துக்குள் நுழைவது குறித்து அறிந்த போலீசார் உடனடியாகஅங்கு விரைந்து வந்தனர். இரு தரப்பினருக்குமிடையே பெரும் மோதல் மூளவிருந்த நேரத்தில் போலீஸார்குறுக்கிட்டு இரு தரப்பினரையும் கலைந்து போகச் சொல்லி எச்சரித்தனர்.
ஆனால் தேவனாம்பட்டனம் மீனவர்கள் தொடர்ந்து சாமியார்பேட்டையில் அடிதடியில் இறங்கவே, போலீசார்வானத்தை நோக்கி 10 முறை துப்பாக்கியால் சுட்டனர். இந்த எச்சரிக்கையை மதிக்காவிட்டால் உங்கள் மீதும்துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என அறிவித்தனர்.
இதையடுத்து மீனவர்கள் உடனடியாக கலைந்து சென்றனர். ஆனாலும் இந்த இரு கிராமங்களிலும் தொடர்ந்துபதற்றம் நிலவுவதால் அங்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications