வைகோவுக்கு வலை வீசும் கூட்டணிக் கட்சிகள்
சென்னை:
தங்களுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று திமுக, பா.ம.க. கட்சிகளின் வேட்பாளர்கள் வைகோவைச்சந்தித்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திமுகவின் வட சென்னை மாவட்ட வேட்பாளரான செ.குப்புசாமியும், திருச்செங்கோடு தொகுதி வேட்பாளரானசுப்புலட்சுமி ஜெகதீசனும் வைகோவை அவரது வீட்டில் சென்று சந்தித்தனர்.
இருவரும் தங்களுக்காக வைகோ அதிக நேரம் ஒதுக்கி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கோரினர். சுப்புலட்சுமிஜெகதீசனுக்கு வைகோவின் மனைவி ரேணுகாதேவி சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
அதே போல பா.ம.க. வேட்பாளர்கள் 6 பேரும் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் வைகோவைஅவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். அவர்களும் வைகோவை தங்களது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில்ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய வைகோ, நான் தேர்தலில் நிற்கவில்லை. இதனால் 40 தொகுதிகளிலும்கூட்டணிக் கட்சியினருக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்வேன். கூட்டணிக் கட்சியினர் அனைவரின்வெற்றிக்காகவும் மதிமுக பாடுபடும் என்றார்.
சில நாட்களுக்கு முன் வைகோவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இளங்கோவன் இரண்டாவதுமுறையாக சந்தித்துப் பேசினார். அப்போது தனக்கு கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி தரப்படும் என்றுநினைப்பதாகவும், அவ்வாறு தொகுதி ஒதுக்கப்பட்டால் தனக்காக வைகோ அதிக நேரம் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்துவிட்டுச் சென்றார்.
ஓராண்டுக்கும் மேலாக பொடாவில் சிறைவாசம் அனுபவித்த வைகோவுக்கு தமிழகம் முழுவதும் அனுதாபம்நிலவுவதாக வரும் தகவல்களையடுத்து அவரை பிரச்சாரத்தில் முழு வீச்சில் பயன்படுத்த அனைத்து எதிர்க்கட்சிகளும் நினைக்கின்றன.
வைகோ-ஸ்டாலின் சந்திப்பு:
இந் நிலையில் திமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஸ்டாலினும் இன்று வைகோவை சந்தித்துப் பேசினார்.பின்னர் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், மக்களவைத் தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பிரச்சார உத்திகுறித்து ஆலோசித்ததாகவும், வைகோவிடம் வாழ்த்து பெற்றதாகவும் தெரிவித்தார்.
சந்திப்பின்போது மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகனும், திமுகவின் மத்திய சென்னை தொகுதிவேட்பாளருமான தயாநிதி மாறனும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications