வீரப்பனை பிடிக்க வருகிறது இஸ்ரேல் சாட்டிலைட்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க இஸ்ரேல் நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட சாட்டிலைட்டுகள் வீரப்பன்நடமாடும் காட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்டு வருவதாக கர்நாடக அதிரடிப் படைத் தலைவர் ஜோதி பிரகாஷ்மிர்ஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வீரப்பனைக் கண்டுபிடிப்பதற்காக இஸ்ரேலிலிருந்து வரவழைக்கப்பட்ட சாட்டிலைட்டுகள், வீரப்பன் நடமாடும்காட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. வீரப்பனைப் பிடிப்பதற்கு இக்கருவிகள் பேருதவியாகஇருக்கும்.
வீரப்பனைப் பற்றி சிறு தகவல் கிடைத்தாலும் அதை அதிரடிப்படையிடம் தெரிவிக்கும் வகையில் மலைவாழ்மக்களின் மனதை மாற்றியுள்ளோம். தேர்தல் நெருங்கி வருவதால், பிரச்சாரத்துக்கு வரும் அரசியல்வாதிகள்எண்ணிக்கை இந்தப் பகுதியில் அதிகரித்து வருகிறது. அவர்களை வீரப்பன் கடத்தாதபடி பாதுகாப்புஅளிக்கப்படுகிறது.
மாலை 6 மணிக்குள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளும்பஐ அரசியல்வாதிகளிடம் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும்வீரப்பன் இரவு நேரங்களில்தான் மக்கள் வாழும் பகுதிகளுக்கு வருகிறான். எனவே, இரவு நேரங்களில் மலைவாழ்கிராமங்களில் கண்காணிப்பு போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த முறை எப்படியும் வீரப்பன் போலீஸார்விரித்த வலையில் சிக்குவான் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
