சென்னை: கிணறு தோண்டும்போது மண் சரிந்து இருவர் பலி
சென்னை:
சென்னை சூளைமேட்டில் கிணறு தோண்டிக் கொண்டிருந்த 2 தொழிலாளிகள் மண் சரிந்து பலிலாயனார்கள்.
சூளைமேடு சிவன் கோயில் தெருவில் வசிப்பவர் ஏழுமலை. இவர் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவர் தனது 3 அடி விட்டமும், 30 அடி ஆழமும் உள்ள தனது கிணற்றை 4 அடி விட்டமும், 45 அடி ஆழமும் கொண்டதாக மாற்ற முடிவெடுத்தார்.
இதற்கான பணியை தங்கவேலு என்பவர் காண்டிராக்ட் எடுத்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மேல புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 9 தொழிலாளிகளைக் கொண்டு தொடங்கியுள்ளார்.
இன்று காலை ஏழுமலை (38), ராமதாஸ் (32) என்ற இருவரும் கிணற்றுக்குள் இறங்கி வேலை பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து இருவரும் புதையுண்டனர். இதில் இருவரும் பலியாகிவிட்டனர்.
ஏழுமலையின் தகப்பனார் வெங்கட்ராமனும் கிணறு தோண்டும் வேலைக்கு வந்திருந்தார். தன் கண்ணெதிரே தன் மகன் மண்ணுக்குள் மூழ்கியதைக் கண்டு கதறி அழுதார்.
தகவல் அறிந்த வட பழனி போலீஸ் உதவி கமிஷனர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். இருவரின் உடல்களையும் மீட்க தீயணைப்படையினர் முயற்சித்து வருகிறார்கள்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications