முத்திரைத் தாள் ஊழல்: வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க ஜெ. முடிவு
சென்னை:
தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போலி முத்திரைத் தாள் மோசடி தொடர்பான தமிழகவழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
இந்த மோசடியில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளான அமித் வர்மா, முகமது அலிபோன்றவர்களுக்கும் தொடர்பிருப்பதாக சென்னையைச் சேர்ந்த சுப்ரமணியன் பாலாஜி என்ற வழக்கறிஞர்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஆளும் தரப்பினருக்கு மிக நெருக்கமான அதிகாரிகளான இவர்களின் பெயர்களும் இந்த ஊழலில் அடிபடுவதால்தேர்தல் நேரத்தில் பிரச்சனையாகிவிடும் என்று தமிழக அரசு கருதுகிறது. இதையடுத்து வழக்கை சிபிஐயிடம்ஒப்படைத்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த அதிகாரிகளைக் காப்பாற்றவும் அரசு முயன்று வருகிறது.
சுப்பிரமணியம் பாலாஜி தாக்கல் செய்த மனு தொடர்பாக தமிழக அரசுக்கும் சிபிஐக்கும் உயர் நீதிமன்றம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாலாஜி தாக்கல் செய்த மனுவில், தமிழக சிபிசிஐடி ஐ.ஜி. அமித்வர்மா, டிஐஜி முகம்மது அலி ஆகியோர் முத்திரைத் தாள் மோசடியில் சம்பந்தப்பட்ட நிஜாமுதீன் என்பவரைத் தப்பவிட்டுள்ளனர்.
இதற்காக அமித் வர்மாவுக்கு, முகம்மது அலியின் மகன் மூலம் ரூ. 7.5 லட்சம் பணம் கைமாறியுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க முயன்ற அப்போதைய சிபிசிஐடி கண்காணிப்பாளர் சந்தீப் ரய் ரத்தோருக்கு மேலதிகாரிகள்ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறியிருந்தார் பாலாஜி.
இதனால் வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந் நிலையில் தமிழக அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு பதில் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், இந்தஅதிகாரிகளுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு அரசின் மீதும், சில காவல்துறை அதிகாரிகள் மீதும் மனுதாரர் பாலாஜி பொய்யான புகார்களைக்கூறியுள்ளார். உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐ.ஜி.அமித் வர்மா எந்தப் பணத்தையும், யாரிடமிருந்தும் வாங்கவில்லை. அதேபோல, டிஐஜி முகம்மது அலிக்கும்இந்த சம்பவத்தில் தொடர்பில்லை. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போலி முத்திரைத் தாள்களைநிஜாமுதீனிடமே அந்த அதிகாரிகள் திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கூறப்படுவதிலும் உண்மையில்லை.
சிபிசிஐடி எஸ்.பி. சந்தீப் ரத்தோர் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் அரசின் ரெக்கார்டுகளில் இல்லை. இதுமுற்றிலும் போர்ஜரி செய்யப்பட்ட கடிதம். எனவே மனுதாரர் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் போலி முத்திரைத் தாள் தொடர்பான வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்என்றும் உயர் நீதிமன்றத்திடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
முகமது அலிக்கு பதவி உயர்வு?:
இதற்கிடையே முகமது அலிக்கு பதவி உயர்வு வழங்கி அவரை வேறு பிரிவுக்கு மாற்றவும் அவரைக் காப்பாற்றவும்முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.
முகமது அலிக்கு மட்டும் தனியே பதவி உயர்வு தந்தால் இந்த விவகாரம் வெட்டவெளிச்சமாகும் என்பதால்,அவரையும் சேர்த்து மொத்தம் 5 டி.ஐ.ஜிக்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று தெரிகிறது.
ஆனால், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இவர்களது பதவி உயர்வுப் பட்டியலைதேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications