கோஷ்டிகள் இல்லாததால் பா.ஜ.கவில் இணைந்தேன்: ராம.சுகந்தன்
சென்னை:
கோஷ்டிகள் ஏதும் இல்லாததாலும், உட்கட்சி ஜனநாயகம் வலுவாக உள்ளதாலும் பாரதீய ஜனதாக் கட்சியில் இணைந்ததாகவாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம.சுகந்தன் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம.சுகந்தன்சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் தர்மபுரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் இன்று சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எம்.பி. சீட்டை எதிர்பார்த்து பா.ஜ.க.வில்இணையவில்லை. காங்கிரஸ் போல அல்லாது, கோஷ்டிகள் ஏதுமின்றி பா.ஜ.க. இயங்கி வருகிறது. அதேபோல, திமுகவில்உள்ளதைப் போன்ற சர்வாதிகாரப் போக்கு இங்கு இல்லை, உட்கட்சி ஜனநாயகம் வலுவாக உள்ளது. இதனால்தான் பா.ஜ.க.வில்இணைந்தேன்.
திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது தவறானது. ராஜீவ்காந்தி படுகொலையை காங்கிரஸார் இவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டது எனக்கு வருத்தம் தந்தது.
பா.ஜ.க. சார்பில் நான் எம்.பி தேர்தலில் போட்டியிடுவேனா என்பது குறித்து தெரியாது. ஆனால் போட்டியிடஉத்தரவிடப்பட்டால் அதை நிச்சயம் ஏற்பேன் என்றார் ராம.சுகந்தன்.
ராம.சுகந்தன் பா.ஜ.க.வில் சேர்ந்தது போல, விரைவில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு முக்கியப் புள்ளி பா.ஜ.க.வில்இணையலாம் என்று பா.ஜ.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications