புதுவை காங்கிரசாருக்கு திமுக கடும் எச்சரிக்கை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி தொகுதியில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் அது தற்கொலைக்கு சமமாக அமையும் என திமுகஎச்சரித்துள்ளது.
அந்தத் தொகுதியை பா.ம.கவுக்கு விட்டுத் தர மாநில காங்கிரசார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பா.ம.க. தனது வேட்பாளரைக் கூட அறிவித்துவிட்ட நிலையில் காங்கிரசார் கை சின்னத்துக்கு வாக்களிக்கக் கோரிபாண்டிச்சேரி முழுவதும் விளம்பரங்களை வரைந்து தள்ளி வருகின்றனர்.
இதற்கு பா.ம.கவும் திமுகவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விஷயத்தில் இதுவரை அமைதி காத்து வந்தபாண்டிச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரான ஜானகிராமன் இப்போது மாநில காங்கிரசாரைக் கண்டித்து அறிக்கைவெளியிட்டுள்ளார்.
கூட்டணியை மதித்து காங்கிரசார் பா.ம.கவுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும். தனித்துப் போட்டியிடுவது போன்றசெயல்களில் அக் கட்சி ஈடுபட்டால் அது தற்கொலைக்கு சமமாக அமையும். பா.ம.க. வேட்பாளருக்காக திமுகதீவிரமாக உழைக்கும் என ஜானகிராமன் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் புதுவை தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதியிடம், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி விரைவில் பேசவுள்ளதாக புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி மீண்டும்கூறியுள்ளார்.
புதுவையை மீண்டும் காங்கிரஸுக்கே பெற்றுத் தர வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம்மிகப் பெரிய கேள்விக்குறியாகி விடும் என்று சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருணாநிதியிடம் பேசி நல்ல முடிவாகக் கூறுவதாக சோனியா காந்தி உறுதியளித்துள்ளார். புதுவைமீண்டும் காங்கிரஸுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்றார்.
இதில் பேசுவதற்கு இனி ஒன்றுமே இல்லை என திமுக திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்ட நிலையில் புதுவைகாங்கிரசார் தொடர்ந்து தங்களது நிலையில் விடாப்பிடியாகவே உள்ளனர்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications