ஜனக் கடலில் தத்தளித்த கும்பகோணம்: இயல்பு நிலைக்கு திரும்புகிறது
கும்பகோணம்:
மகாமகத்துக்கு வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் படிப்படியாக ஊர்களுக்குத் திரும்புவதால் கும்பகோணத்தில்இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
12 வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகாமகம் கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.நேற்று முன்தினம் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுமார் 20 லட்சம் பக்தர்கள் கும்பகோணத்தில்திரண்டிருந்தனர். இதனால் கும்பகோணம் நகரத்தில் திரும்பிய பக்கமெங்கும் ஜனத்திரள் காட்சியளித்தது.
தீர்த்தவாரி முடிந்ததையடுத்து, பக்தர்கள் கும்பகோணத்தை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர்.பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸாரும் வெளியேறத் துவங்கியுள்ளனர்.
மகாமகத்தையொட்டி நகராட்சி சார்பில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டதால், வரும் ஆண்டுகளில் அடிப்டைவசதிகளுக்காக கும்பகோணம் மக்கள் ஏங்கும் நிலை ஏற்படாது.
ரூ.14 கோடிக்கு குடிநீர் அபிவிருத்தி பணிகளும், ரூ.51.92 லட்சத்தில் வடிகால் மற்றும் சிறுபாலங்களும் கட்டும்பணியும், ரூ.16 கோடிக்கு சாலைப் பணிகளும், ரூ.79.95 லட்சத்துக்கு பள்ளிக் கட்டடம் மற்றும் சத்துணவு மையபராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை புனித நீராடலில் மொத்தம் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். வரும் 10ம் தேதி வரையும்நீராடலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications