எம்.ஜி.ஆர் நிழலில் இளைப்பாறிய ஜெயலலிதா: வாசன் கடும் தாக்கு
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று கூறும் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில்பிறந்தவரா, எம்.ஜி.ஆரின் நிழலில் இளைபாறியதைத் தவிர அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தமிழககாங்கிரஸ் தலைவர் வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்களின் விதிவசத்தாலும், வினைப் பயனாலும் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் ஜெலலிதா,அதிமுக தேர்தல் அறிக்கை என்ற பெயரில் அநாகரீகத்தின் எல்லையைக் கடந்துள்ளார். காங்கிரஸ் தலைவர்சோனியாவை தனிப்பட்ட முறையில் தாக்கியுள்ளார்.
மனதில் இருப்பதுதான் வார்த்தைகளாக வெளியே வரும் என்பார்கள். அந்த வகையில் சோனியா காந்தியைவிமர்சித்துள்ளவர்களின் மனதிலும் என்ன உள்ளது என்பது தெரிய வருகிறது. சோனியா பிரதமரானால் நாட்டின்கலாச்சாரம், பண்பாடு பாதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் ஜெயலலிதா.
இந்த ஜெயலலிதா கடைபிடித்து வரும் பண்பாட்டையும் அவரது கலாச்சாரத்தையும் ஒருமுறை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
திரைப்படத் துறையில் புறக்கணிக்கப்படும் வரை நாட்டைப் பற்றி கவலையே படாமல், மக்களைப் பற்றி எள்அளவும் சிந்திக்காமல் தன் நலனைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின்நிழலில் இளைப்பாறியதைத் தவிர வேறு என்ன செய்தார் இவர். மக்களுக்காக என்ன தியாகம் செய்தார்?
அதே நேரத்தில் தனது மாமியார், கணவர் என குடும்பத்தையே நாட்டுக்காக இழந்தவர் சோனியா காந்தி. அவரைவிமர்சிக்க ஜெயலலிதாவுக்கு எந்த வகையிலாவது தகுதி உள்ளதா?
போகும் இடமெல்லாம் கூட்டம் சேருவதால் சோனியாவைக் கண்டு அச்சப்பட்டுள்ள பா.ஜ.கவினர் அவர்வெளிநாட்டவர் என்ற துருப்பிடித்த ஆயுதத்தைத் தூக்கியுள்ளனர். அதற்கு சானை பிடிக்கும் வேலையைஜெயலலிதாவிடம் தந்துள்ளனர்.
இத்தாலியில் பிறந்ததால் இந்தியாவை ஆளும் தகுதி சோனியாவுக்கு இல்லை என்று ஜெயலலிதா கூறுகிறார்.அப்படியானால் தமிழ்நாட்டில் பிறக்காத, தமிழரலே அல்லாத ஜெயலலிலதா தமிழ்நாட்டை ஆளத் தகுதியற்றவர்என்ற முடிவை தமிழக மக்கள் எடுத்தால் என்னவாகும்? ஜெயலலிதா கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்வீசுகிறார்.
இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications