ஓய்வை ரத்து செய்த ஜெ: இன்றும் தீவிர பிரசாரம்
வேலூர்:
முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திட்டத்தில் முன்புஅறிவிக்கப்பட்டிருந்தபடி ஓய்வெடுக்காமல் இன்றும் பிரச்சாரத்தைத் தொடர்கிறார்.
நேற்று முன்தினம் சென்னையில் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா நேற்று காஞ்சிபுரத்தில் பிரசாரத்தைத்தொடங்கினார். வாலாஜாபாத், கருக்குப்பேட்டை, அய்யன்பேட்டை, காவேரிப்பாக்கம் வழியாகவாலாஜாபேட்டைக்குச் சென்றார். அங்கு அவர் பிரச்சாரத்தை முடிக்கும்போது இரவு மணி 10.
வாலாஜாபேட்டைக்கு அடுத்து பிரச்சாரப் பயணத் திட்டப்படி அவர் ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல் விஷாரம்,கீழ் விஷாரம் உள்ளிட்ட 11 ஊர்களில் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். ஆனால், இரவு 10 மணிக்கு பிரச்சாரம்செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாலாஜாபேட்டை கூட்டத்துடன் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார்.
நேற்றிரவு வேலூர் ரிவர்வியூ ஹோட்டலில் ஜெயலலிதா தங்கினார். இன்று வேலூரில் ஓய்வெடுப்பதாகத்திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நேற்று 11 ஊர்கள் பிரச்சாரத்தில் விடுபட்டுப் போனதால் இன்று அந்த ஊர்களில்பிரச்சாரம் செய்ய ஜெயலலிதா முடிவு செய்தார்.
இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு விடுபட்ட ஊர்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார்.ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல் விஷாரம் ஆகிய இடங்களில் மாலையில் பொதுக் கூட்டத்திலும் அவர்பேசுகிறார். வேலூரிலேயே இன்றும் தங்குகிறார். நாளை வேலூர் கோட்டை மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
நாளை திருவண்ணாமலை மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, இரவு திருவண்ணாமலையில்தங்குகிறார். நாளை மறுநாள் ஓய்வெடுக்கிறார்.
விரல்வெட்டி போலீஸ்காரருக்கு உதவி
இதற்கிடையே அதிமுகவின் வெற்றிக்காக கோவிலில் வைத்து தனது கை விரல்களைத் துண்டித்துக் கொண்டபோலீஸ்காரருக்குரிய மருத்துவ செலவுகளை அதிமுகவே ஏற்கும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் காரியாபட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் ரத்தினம். தீவிர அதிமுக அனுதாபியானஅவர் நாடாளுமன்றத் தேர்தலில் அக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தனது இடது கையின் 3விரல்களை துண்டித்துக் கொண்டார்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகவின் மீது கொண்ட ஆழ்ந்த பற்றின்காரணமாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் தனது கைவிரல்களை அயோத்திப்பட்டனம் ராமர் கோவிலில் வைத்து துண்டித்துக் கொண்டுள்ளார் காவலர் ரத்தினம்.
இதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா மிகுந்த மன நெகிழ்ச்சியும், ஆற்றொணாத் துயரம் அடைந்தார். ரத்தினத்தைஉடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து அவரது துண்டிக்கப்பட்ட விரல்களைமீண்டும் அறுவைச் சிகிச்சை மூலம் சேர்க்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ரத்தினத்திற்கான சிகிச்சைச் செலவுகள் அனைத்தையும் அதிமுகவே ஏற்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
கழகத் தொண்டர்கள் எந்த வகையிலும் தங்களது உடலை வருத்திக் கொள்ளவோ, ஊனப்படுத்திக் கொள்ளவோகூடாது என்று பலமுறை ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார். எனினும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வது அவருக்குமன வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications