அண்ணாவை இழிவுபடுத்திய அத்வானி: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை:
அறிஞர் அண்ணாவுடன் ஜெயலலிதாவைப் போய் ஒப்பிட்டதன் மூலம் அண்ணாவையே கேவலப்படுத்திவிட்டார்அத்வானி என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.
சென்னையில் திமுக தொண்டரின் திருமணத்தை சீர்திருத்த முறைப்படி இன்று காலை நடத்தி வைத்த கருணாநிதிபேசியதாவது:
தந்தை பெரியார் சீர்திருத்தத் திருமணங்களைநடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தும்போது சிக்கனமாய்இருங்கள் என்று சொல்வார். அதே அறிவுரையை இந்தத் தம்பதிக்கும் நான் சொல்லிக் கொள்கிறேன். பெரியாரின்வழி வந்த அறிஞர் அண்ணா சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக்கினார்.
ரத யாத்திரை புறப்பட்டிருக்கும் அத்வானி, அண்ணாவை இழுவுபடுத்தி பேசியிருக்கும் ஒரு வார்த்தையைபத்திரிக்கைகளில் பார்த்தேன். அண்ணாவை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டு, அண்ணா வழியில் ஜெயலலிதாநடைபோடுகிறார் என்று பேசியிருக்கிறார். இது அண்ணாவை இழிவுபடுத்தும் செயலே தவிர வேறல்ல.
அண்ணாவைக் கேவலப்படுத்தவே ரத யாத்திரை புறப்பட்டுள்ளார் அத்வானி என்றே நினைக்கிறேன். அண்ணாவழி என்ன?. கேளரத்தில் உள்ள கோவிலுக்கு யானையை காணிக்கை தருவதா? யாாகங்கள் நடத்திபுரோகிதர்களுக்கு தானம் தருவதா? அண்ணா வழி, பெரியார் வழி என்பது பகுத்தறிவு வழி.
மொழிக்காக, இனத்துக்காக தியாகங்கள் செய்தவர் அண்ணா. அவரோடு ஜெயலலிதாவை ஒப்பிட்டுப் பேசுவதைஇனியாவது அத்வானி நிறுத்திக் கொள்வது நல்லது.
தெலுங்கானா தலைவர் சந்திப்பு:
இதற்கிடையே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் திமுகதலைவர் கருணாநிதியையும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் இன்று நேரில் சந்தித்து தனிதெலுங்கானா மாநிலத்திற்கு ஆதரவு கோனார்.
தெலுங்கானா ராஷ்டிர சமிதியும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின்தூக்கத்தைக் கெடுத்துள்ளன. 16 எம்.பி. தொகுதிகளையும் 107 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியதெலுங்கானா பகுதியில் தனி மாநில கோரிக்கை உச்ச கட்டத்தில் உள்ளது.
இதையே பிரச்சார ஆயுதமாக வைத்து நாயுடுவை ராஷ்டிர சமிதி தாக்கி வருகிறது. இந்த அமைப்புடன் காங்கிரசும்கைகோர்த்துள்ளதால் இப் பகுதியில் நாயுடுவுக்கு பெரும் தோல்வி கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
இந் நிலையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவ் இன்று சென்னை வந்து திமுக தலைவர்கருணாநிதியைச் சந்தித்தார். இரு தலைவர்களும் வரும் நிாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், அம் மாநில அரசியல்சூழ்நிலை குறித்தும் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், தெலுங்கானா மாநிலத்திற்கு ஆதரவு கோரி சந்திரசேகர் ராவ்என்னிடம் பேசினார். இது குறித்து எங்கள் கட்சியில் ஆலோசனை நடத்திவிட்டு சொல்வதாக கூறியிருக்கிறேன்.
பெரியார், அண்ணா வழியில் ஜெயலலிதா செயல்படுவதாக துணைப் பிரதமர் அத்வானி கூறியுள்ளார். இதன்மூலம் அந்த இரு பெரும் தலைவர்களையும் அத்வானி கேவலப்படுத்தியிருக்கிறார். தனது ரத யாத்திரைக்குத்தேவையான பொருட்களை டெல்லியில் இருந்து இந்திய விமானப் படை விமானத்தில் கொண்டு வரச்செய்திருக்கிறார் அத்வானி என்றார்.
கருணாநிதியைச் சந்தித்த ராவ் பின்னர் வைகோவையும் நேரில் சந்தித்து தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவுகோரினார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications