தேர்தல் விவர வெப்சைட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் தொடர்பான சந்தேகங்கள், விளக்கங்களை அறிய தமிழக அரசின் இணைய தளத்தில் வசதிசெய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பது எப்படி, மின்னணு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது, தேர்தலில்போட்டியிட விரும்பினால் அதற்கான நடைமுறைகள் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு இந்தஇணைய தளத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணையத்தால் இந்த இணைய தளம் பக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வாக்காளர்களுக்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் இடையே பாலம் போல இந்த இணைய தளம் செயல்படும்என்று மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்துள்ளார்.
இந்த இணைய தளத்தின் முகவரி: www.tn.gov.in/elections


Click it and Unblock the Notifications
