பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல்: தர்மபுரியில் பு.தா.இளங்கோவன்
சென்னை:
பா.ஜ.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை கட்சி மேலிடம்இன்று அறிவித்தது.
வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய கட்சியின் தேர்தல் குழு, கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில்இன்று காலை டெல்லியில் கூடியது. மாநில நிர்வாகிகளுடன் தேர்தல் குழுவினர் ஆலோசனை நடத்திய பின்னர்வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. 136 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை பிரமோத் மகாஜன்வெளியிட்டார்.
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க. வட சென்னை, கோவை, நாகர்கோவில், நீலகிரி,தர்மபுரி, சிதம்பரம் (தனி) மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் தற்போதுள்ள சிட்டிங் எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்சி.பி.ராதாகிருஷ்ணன் (கோவை), பொன் ராதாகிருஷ்ணன் (நாகர்கோவில்), மாஸ்டர் மாதன் (நீலகிரி) ஆகியோர்மீண்டும் போட்டியிடுகின்றனர்.
வட சென்னையில் சுகுமாறன் நம்பியார், புதுச்சேரியில் லலிதா குமாரமங்கலம், சிதம்பரத்தில் தடா பெரியசாமியும்போட்டியிடுகிறார்கள். யாரை நிறுத்தவது என்று குழப்பத்தில் இருந்த தர்மபுரி தொகுதியின் வேட்பாளராகபு.தா.இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார்.
பு.தா.இளங்கோவன் கடந்த முறை பா.ம.க. சார்பில் தர்மபுரியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆனால் இந்தமுறை பா.ம.க. அவருக்கு சீட் ஒதுக்க மறுத்துவிட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த அவர் பா.ஜ.கவில் இணைந்துபோட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் அவர் பெயர் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பசுமை தாயகம் தலைவர் டாக்டர் அன்புமணி (பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் மகன்) நேற்றுபத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், பு.தா.இளங்கோவன் கட்சியில்தான் இருக்கிறார். அவருக்குஉடல்நலம் சரியில்லை. விரைவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் வாஜ்பாய் லக்னோ தொகுதியிலும், துணைப் பிரதமர் அத்வானி காந்தி நகர் தொகுதியிலும்போட்டியிடுகிறார். அண்மையில் தனது மகன் வருண் காந்தியுடன் பா.ஜ.கவில் இணைந்த மேனகா காந்தி பிலிபித்தொகுதியில் போட்டியிடுகிறார். சட்டத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, விவசாயத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்தவிர மற்ற மத்திய அமைச்சர்கள் அனைவரும் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.
பா.ஜ.க. பொதுச் செயலாளர்கள் பிரமோத் மகாஜன், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரும் தேர்தலில்போட்டியிடவில்லை. தேர்தல் பணிகளை கவனிக்கும் பொருட்டு இவர்கள் போட்டியிட வில்லை என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications