எளிமையும் தீவிரமும்.. பிரச்சாரத்தில் கலக்கும் கம்யூனிஸ்டுகள்
சென்னை:
கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள்தான். மொத்தமே 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டாலும் கூட புதுவைஉள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தங்களது கூட்டணிக்காக தீவிரப் பிரச்சாரத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும்போட்டி போட்டு வருகின்றன.
இந்தியாவில் இதுவரை கோஷ்டிப் பூசல் இல்லாத ஒரே கட்சி என்று கூறப்படுவது கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே.அட்டகாசமான கட்டமைப்பு, நிர்வாகம், பிடிவாதமான கொள்கை என யாராலுமே கலைக்க முடியாத அளவுக்குஇரும்புக் கோட்டை போன்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்.
தோழமை கொண்டுள்ள கட்சிகளுக்காக உயிரைக் கொடுத்து வேலை பார்ப்பவர்கள் இந்த கம்யூனிஸ்ட் தோழர்கள்.இப்போது திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இவர்கள் இப்போதே தீவிர பிரச்சாரத்தில்ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.
கூட்டணிக் கட்சிகள் ஏற்பாடு செய்யும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு வரும் இவர்கள் தேர்தல் செலவுக்கு என்றுவேட்பாளர் தரப்பில் இருந்து தரப்படும் பணத்தை வாங்க மறுப்பதோடு, ஆடம்பரமான உணவு பரிமாறப்பட்டால்அதைத் தவிர்த்துவிட்டு, டீ மட்டும் குடித்துவிட்டுக் கிளம்பிவிடுகின்றனர்.
இவர்கள் போட்டியிடுவது தலா 2 தொகுதிகளில் மட்டுமே. இருந்தாலும், 40 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில்ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு வீதி நாடகங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், கூத்து போன்றவை மூலமேஇவர்கள் நடத்தும் எளிமையான, வித்தியாசமான பிரச்சாரங்கள் பலரையும் கவர்கின்றன.
மாநில அளவில் இந்த வித்தியாச பிரச்சாரம் நடத்துவதற்கான பயிற்சிகள் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில்அளிக்கப்பட்டு வருகின்றன.
ஆர்ப்பாட்டமோ, ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் எளிமையாக, நாடகங்கள் மூலம் கம்யூனிஸ்ட் தோழர்கள்எடுத்து வைக்கும் கருத்துக்களை மக்கள் நன்றாகவே வரவேற்கிறார்கள்.
இவர்களது எளிமைக்கு திருச்சி ஒரு உதாரணம். இங்கு கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களை உற்சாகப்படுத்திகளத்தில் இறக்குவதற்காக பெரும் பிரியாணி விருந்துக்கு மதிமுக வேட்பாளரான எல்.கணேசன் ஏற்பாடுசெய்துள்ளார். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் இதை விரும்ப மாட்டார்கள் என்று அவரிடம் எடுத்துச்சொல்லப்பட்டதால் அவர்களுக்குத் தனியாக சாதரணமான, சைவ உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சி என்பதை வெறும் பார்மாலிட்டியாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், தங்களது 4 தொகுதிகளைத்தவிர மற்ற 36 தொகுதிகளிலும் கடுமையாகப் பிரச்சாரம் செய்யும் கம்யூனிஸ்டுகளை தங்களுடன் வைத்திருப்பது,திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு உண்மையிலேயே மிகப்பெரிய பலம்தான்.












Click it and Unblock the Notifications