கட்சி உடைப்பில் பு.தா. இளங்கோவன்: கலகலக்கும் பா.ம.க
தர்மபுரி:
பு.தா. இளங்கோவன் மூலமாக பாட்டாளி மக்கள் கட்சியை உடைக்கும் முயற்சியில் பா.ஜ.க. இறங்கியுள்ளது.அதைத் தடுக்கும் வேலைகளில் ராமதாசும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
பா.ம.க. தர்மபுரி எம்.பியாக இருந்த பு.தா. இளங்கோவன் தனக்கு கட்சியில் உரிய மதிப்பில்லாமல் போனதால்பா.ஜ.கவில் சேர்ந்தார். இதையடுத்து தர்மபுரி பகுதி பா.ம.க. நிர்வாகிகளையும் பா.ஜ.கவுக்கு இழுக்க முயன்றுவருகிறார்.
வன்னியர்கள் நிறைந்த வட மாவட்டங்களில் பா.ஜ.கவுக்கு இதுவரை எந்த ஆதரவும் இல்லை. இந்த நிலையைஇளங்கோவன் மூலம் மாற்றிவிடலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. இதனால் அவருக்கு தர்மபுரி சீட்கொடுக்கப்பட்டதோடு, பா.ம.கவின் மற்ற முக்கியஸ்தர்களையும் கட்சிக்குள் இழுக்கும் பொறுப்பையும் பா.ஜ.க.தந்துள்ளது.
அந்த வேலையில் இளங்கோவனும் தீவிரமாக இறங்கியுள்ளார். முதல் கட்டமாக தன்னைப் போலவேஅதிருப்தியில் இருக்கும் பா.ம.கவினருக்கு இளங்கோவன் வலை வீச ஆரம்பித்துள்ளார்.
பா.ம.க. முன்னாள் தர்மபுரி மாவட்டத் தலைவர் ராமலிங்கம், ஒன்றிய அளவிலான முக்கியஸ்தர்கள் என பலரும்இளங்கோவன் பக்கம் சாய்ந்து வருகின்றனர்.
இதையடுத்து டேமேஜ் கண்ட்ரோலில் இறங்கியுள்ளார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். கட்சியின் தலைவர் மணியைதர்மபுரி பகுதியில் டேரா போட வைத்துள்ள ராமதாஸ், தனது மகன் அன்புமணியையும் சேலம், தர்மபுரிபகுதிகளுக்கு அனுப்பி பா.ம.க. அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தி வருகிறார்.
ஏற்கனவே வீர வன்னியர் பேரவையின் தலைவர் ஜெகத்ரட்சகனும் ரஜினி ரசிகர்களும் கைகோர்த்துக் கொண்டு ஒருபக்கம் டார்ச்சர் தந்து கொண்டுள்ள நிலையில் இளங்கோவன் மூலமாக பா.ஜ.க. தர ஆரம்பித்துள்ளதொல்லைகளால் நொந்து போயுள்ளார் ராமதாஸ்.
வழக்கமாக ராமதாஸ் தான் அணி விட்டு அணி மாறி அவருடன் கூட்டணி வைத்தவர்களுக்கு கடுக்காய்கொடுப்பார். இந்த முறை அவருக்கே, அவரது கட்சியினர் மூலமே, டென்சன் கொடுக்க ஆரம்பித்துள்ள பா.ஜ.க.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications