பஸ்சில் ஏறி ஓட்டுக் கேட்கும் ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர்
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் முருகேசன், வித்தியாசமான முறையில் தேர்தல்பிரச்சாரத்தை மேற்கொண்டு தொகுதி மக்களை ஈர்த்து வருகிறார்.
ராமநாதபுரம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் முருகேசன். தொகுதியில் இவருக்கு பெரிய அளவில் செல்வாக்குஇல்லை என்று அதிமுக வட்டாரத்திலேயே கூறப்படுகிறது.
ஆனால் அது பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தனது தேர்தல் பணிகளை தொடங்கி நடத்தி வருகிறார்முருகேசன். ராமநாதபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது,அந்தப் பக்கம் வரும் அரசுப் பேருந்துகளை நிறுத்திபஸ்சில் ஏறி தனக்காக ஓட்டுப் போடும்படி பயணிகளிடம் கும்பிட்டபடியே ஓட்டு சேகரிக்கிறார்.
முருகேசனின் இந்த உத்தி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும், முருகேசனைப் போலவேமற்ற வேட்பாளர்களும் அரசு பஸ்சை நிறுத்தி ஓட்டுக் கேட்டால் உரிய நேரத்திற்கு ஊர் போய்ச் சேர முடியாதேஎன்ற அச்சத்தில் பயணிகள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications
