வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா?: தொலைபேசி மூலம் அறியலாம்
டெல்லி:
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை தொலைபேசி மூலம் அறிந்து கொள்ளும் வசதியை தேர்தல்ஆணையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நாளுக்கு நாள் புதுப்புது கட்டுப்பாடுகள் மூலம் கிடுக்கிப்பிடிபோடும் தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்கு பல வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இப்போது வாக்காளர்பட்டியல் விவரங்களை தொலைபேசி மூலம் அறியும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய தேர்தல் துணை ஆணையர் நூர் முகம்மது செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இருக்கிறதா என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக நாடுமுழுவதிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்த உதவிமையங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமைக்கப்படும்மையங்களில் 20 முதல் 25 தொலைபேசி இணைப்புகள் செயல்படும்.
வாக்காளர்களின் அடையாளத்தை போலீஸார் இனி சரிபார்க்க மாட்டார்கள். வாக்குச்சாவடியில் உள்ள தேர்தல்அதிகாரிகளே சோதனை பார்ப்பார்கள். புதிய இடங்களில் குடியிருப்பு வசதி ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கும்குடிசைவாழ் மக்களுக்கு வாக்களிக்க வசதியாக சிறப்பு சீட்டுக்களை தேர்தல் ஆணையம் வழங்கும் என்றார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications