சோனியா விஷயத்தில் திமுக நிலை மாறிவிட்டது- பா.ஜ.க. குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வெளிநாட்டினர் உயர் பதவிக்கு வரக் கூடாது என தேசிய ஜனநாயகக் கூட்டணியில் செயல் திட்டத்தில்குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் கையெழுத்திட்ட திமுக, மதிமுக, பா.ம.க. ஆகியவை இப்போது நிலையை மாற்றிக்கொண்டு சோனியா பிரதமராவதில் தவறில்லை என்று பேசுகின்றன என பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடுகூறினார்.

சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

திமுக, மதிமுக, பா.ம.க. ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தபோது தயாரிக்கப்பட்ட செயல்திட்டத்தில் வெளிநாட்டில் பிறந்தவர்கள் உயர் பதவிக்கு வரக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் திமுகஉள்ளிட்ட அனைத்து தே.ஜ. கூட்டணிக் கட்சிகளும் கையெழுத்திட்டன. (இதை இன்று நிருபர்களை சந்தித்தகருணாநிதி மறுத்தார்)

ஆனால், இப்போது நிலை மாறி சோனியா பிரதமராவதில் ஆட்சேபனை இல்லை என்கிறார்கள். வெளிநாட்டினர்உயர் பதவிக்கு வருவதை மறு பரிசீலனை செய்ய தேசிய ஆணையம் அமைக்கவும் திட்டமிட்டோம். ஆனால்,மக்களவையில் மெஜாரிட்டில் இல்லாததால் அதைச் செய்ய முடியவில்லை.

தேர்தலுக்குப் பின் ஆட்சியில் பங்கேற்க மாட்டோம் என்று கருணாநிதி கூறியிருக்கிறார். அவர் மூத்த தலைவர்.தேர்தலுக்குப் பின் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்று அவருக்குத் தெரியும். இதனால் தான் அப்படிக்கூறியுள்ளார்.

தமிழகம், பாண்டிச்சேரியில் அதிமுக-பா.ஜ.க. கூட்டணி 40 இடங்களிலும் வெல்லும். அந்த அளவுக்கு மக்களிடம்எங்களுக்கு செல்வாக்கு உள்ளது என்றார்.

அவரிடம், வாஜ்பாய் ஒரு செயல்படாத பிரதமர். காவிரியில் நீரைப் பெற்றுத் தர தவறிய பா.ஜ.கவினர் தஞ்சைக்குஓட்டு கேட்க வந்தால் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா முன்பு கூறியது குறித்துநமது நிருபர் உள்பட சில நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த நாயுடு, அப்போது கூறிய கருத்து குறித்து இப்போது பிரச்சினை கிளப்ப வேண்டியதில்லைவாஜ்பாயின் புகைப்படத்துடன் அவர்கள் (அதிமுக) பிரசாரம் செய்துவருகிறார்கள். எனவே அதற்காக பா.ஜ.க.வருத்தப்படத் தேவையில்லை. இதுகுறித்து யாருக்கும் விளக்கம் தரத் தேவையில்லை என்றார் வெங்கையாகோபத்துடன்.

குஜராத் கலவரத்தில் முஸ்லீம்கள் மட்டுமல்லாது இந்துக்களும்தான் பாதிக்கப்பட்டார்கள். எனவே குஜராத்கலவரத்திற்காக முஸ்லீம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை என்றார்.

இதனையடுத்து தமிழக பா.ஜ.க. வேட்பாளர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன் (கோவை), சுகுமாறன் நம்பியார் (வடசென்னை), பொன்.ராதாகிருஷ்ணன் (நாகர்கோவில்), மாஸ்டர் மாதன் (நீலகிரி), பு.தா.இளங்கோவன் (தர்மபுரி),தடா பெரியசாமி (சிதம்பரம்) ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, பார்வார்டு பிளாக், பா.ம.க., லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளைச்சேர்ந்தவர்கள் வெங்கைய்யா நாயுடு முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+