திமுக கையெழுத்திட்ட ஆதாரம் காட்டுகிறது பா.ஜ.க
சென்னை:
வெளிநாட்டில் பிறந்தவர்கள் முக்கியப் பதவிகளுக்கு வரக் கூடாது என்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல் திட்டத்தில்கருணாநிதி கையெழுத்துப் போட்டது உண்மைதான் என்று கூறி, கருணாநிதியின் கையெழுத்து அடங்கிய செயல் திட்டதீர்மானத்தையும் காட்டி திமுகவுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், வெளிநாட்டில் பிறந்தவர்கள்ஆட்சிப் பதவிக்கு வரக் கூடாது என்று சட்டம் கொண்டு வர தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயன்றது.
ஆனால் மக்களவையில் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால்இதுதொடர்பாக கூட்டணியின் செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கருணாநிதியும் கையெழுத்துப் போட்டுள்ளார்என்று கூறியிருந்தார்.
இதற்கு திமுக தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்திருந்தார். அப்போது வெங்கையா நாயுடுவையும் அவர் கடுமையாகவிமர்சித்தார். அப்போது கருணாநிதியுடன் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, செயல் திட்டத்தில் நாங்கள்கையெழுத்து போட்டபோது வெளிநாட்டினர் பிரதமராகக் கூடாது என்ற தெளிவான தீர்மானம் அதில் இல்லை என்று விளக்கம்தந்தார்.
இந் நிலையில் இன்று கருணாநிதியின் கூற்றை மறுத்து பா.ஜ.க. தேசிய செயலாளர் இல.கணேசன் கருணாநிதியின் கையெழுத்துஅடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்ட தீர்மானத்தைக் காட்டி திமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நிருபர்களிடம் கணேசன் கூறுகையில், வெளிநாட்டில் பிறந்தவர்கள் உயர் பதவிகளுக்கு வரக் கூடாது என்பதை வலியுறுத்தி தேசியஜனநாயகக் கூட்டணி நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் திமுக தலைவர் கருணாநிதியும் கையெழுத்துப் போட்டுள்ளார்.
இதை வெங்கையா நாயுடு கூறியபோது அதை மறுத்து மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி வெங்கையாவைவிமர்சித்து மறுத்துள்ளார். கருணாநிதியின் கூற்றில் உண்மையில்லை என்பதைக் காட்டுவதற்காக இப்போது செயல் திட்டதீர்மானத்தை வெளியிட நேர்ந்துள்ளது.
இதில், பிரதமர் வாஜ்பாய் முதலில் கையெழுத்திட்டுள்ளார். 3வதாக கருணாநிதியின் கையெழுத்து இடம் பெற்றுள்ளது. தற்போதுதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க, மதிமுக கட்சிகளின் தலைவர்களது கையெழுத்துக்களும் இடம் பெற்றுள்ளன.
உண்மை இவ்வாறிருக்க வெங்கையா நாயுடுவை மிகக் கடுமையாக விமர்சித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளதுவியப்பளிக்கிறது என்றார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications