பு.தா.இளங்கோவனுக்கு வன்னியர் சங்கம் ஆதரவு
சென்னை:
தர்மபுரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பு.தா.இளங்கோவன், வன்னியர் சங்கத் தலைவரும் ராமதாசின்தீவிர எதிரியுமான ஏ.கே.நடராஜனை சந்தித்து ஆதரவு கோனார்.
பாமகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருந்த பு.தா. இளங்கோவனை, தர்மபுரியில் போட்டியிட ஆள் கிடைக்காமல்பரிதவித்து வந்த பா.ஜ.க. வளைத்துப் போட்டு வேட்பாளராக்கி உள்ளது.
வன்னியரான பு.தா. இளங்கோவனுக்கு தர்மபுரி தொகுதியில் சொந்த செல்வாக்கு உள்ளது. மேலும், வன்னியர் சங்கத்தை டாக்டர்ராமதாஸ் தொடங்கிதில் இருந்தே அவருடன் கூட இருந்து செயல்பட்டவர், கட்சிக்காக அரும்பாடுபட்டவர் என்பதால்வன்னியர்கள் மத்தியில் மரியாதையையும் பெற்றுள்ளார்.
இந் நிலையில், ராமதாசுக்கு போட்டியாக வன்னியர் சங்கம் நடத்தி வரும் ஏ.கே.நடராஜனை சென்னையில் உள்ள அவரது வீட்டில்பு.தா.இளங்கோவன் சந்தித்துப் பேசினார். அப்போது, தர்மபுரியில் தனது வெற்றிக்காக வன்னியர் சங்கம் ஆதரவு தர வேண்டும்என்று நடராஜனிடம் கோரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணிக்கு வன்னியர் சங்கம் ஆதரவு தெவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால்இளங்கோவனுக்காக ஏ.கே. நடராஜன் களம் இறங்குவது உறுதியாகிவிட்டது.
மேலும் புதுவை தொகுதியில் லலிதா குமாரமங்கலத்திற்குப் பதிலாக வன்னியரான பேராசிரியர் தீரனை நிறுத்தினால் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் பா.ஜ.கவுக்கு ஏ.கே. நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications