"குண்டு" கல்யாணம் போடும் "குண்டு"
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வரும் காமெடி நடிகர்குண்டு கல்யாணம் தொகுதி மக்களை நன்றாக சிரிக்க வைத்து வருகிறார்.
ஒரு காலத்தில் பிசியான காமெடி நடிகராக இருந்த குண்டு கல்யாணம் அதிமுகவின் தீவிர தொண்டர்களில் ஒருவர்.அத்தோடு இல்லாமல் கட்சி பேச்சாளரும் கூட. மயிலாடுதுறை பிரச்சாரக் களத்தில் குண்டு கல்யாணம்குதித்துள்ளார்.
வேட்பாளர் மணியத்திற்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்றும், ஜீப்பில் சென்றும் பிரச்சாரம் செய்கிறார். போகும்இடங்களிலெல்லாம் திமுகவையும், அதன் தலைவர்களையும் நக்கல், நையாண்டி செய்து காமெடியாக அவர்பேசுவது மக்களைக் கவர்ந்துள்ளது.
கருணாநிதியும், மணிசங்கர அய்யரும் அவர் வாயில் தினம் வந்து போகும் தலைவர்களாக உள்ளார்கள். ஒருஇடத்தில் அவர் பிரச்சாரம் செய்கையில், முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு அவரது மகன் தயாநிதி மாறனுக்குமத்திய அமைச்சர் பதவி கேட்டார் கருணாநிதி. அதைத் தர வாஜ்பாய் மறுத்ததால்தான் கூட்டணியை விட்டுவெளியே வந்தார் கருணாநிதி என்று கூறினார்.
சீரியஸாகப் போய்க் கொண்டிருக்கும் பிரச்சாரத்திற்கிடையே, குண்டு கல்யாணம் போன்றவர்களும் தேவைதான்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications