தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் ரெடி?
டெல்லி& சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகலாம் என்றுதெரிகிறது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில் மணிசங்கர அய்யர்-மயிலாடுதுறை, ஆர்.பிரபு- நீலகிரி ஆகியோர் மட்டுமே வேட்பாளர்களாக முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டனர்.
மற்ற 8 தொகுதிகளின் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் வாசன் கோஷ்டிக்கும்- இளங்கோவன்-கமல்நாத்கோஷ்டிக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. தமிழக காங்கிரஸ் பார்வையாளரான கமல்நாத்,இளங்கோவனுடன் கோஷ்டி சேர்ந்து கொண்டு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக சோனியாவிடம் புகார்தந்தார் வாசன்.
இதையடுத்து வேட்பாளர்களை முடிவு செய்யும் பொறுப்பை கமல்நாத்திடம் இருந்து பறித்துவிட்ட சோனியா,இப்போது அவரே மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வேட்பாளர்களை இறுதி செய்து வருகிறார்.
அதன்படி இன்று காலை மேலும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில்இளங்கோவனுக்கு கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பழனி தொகுதிக்கு கார்வேந்தன், திண்டுக்கல்லுக்கு என்.எஸ்.வி. சித்தன், பெரியகுளத்தில் தினகரனை எதிர்த்துலாட்டரி அதிபரான ஜே.எம்.ஆரூண், ராசிபுரத்தில் ராணி ஆகியோர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லிகாங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் திருநெல்வேலி, சேலம் ஆகிய தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இன்று அல்லது நாளை இறுதிசெய்யப்பட்டுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சிவகங்கை இழுபறியாகவே உள்ளது. இந்தத் தொகுதி ப.சிதம்பரத்துக்கா அல்லது சுதர்சனநாச்சியப்பனுக்கா என்பதில் தலைமையிலேயே குழப்பம் உள்ளதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications