பழனி கோவில் பஞ்சலோக சிலையை அகற்றக் கோரி வழக்கு
சென்னை:
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளபஞ்சலோக சிலையை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் சித்தர்கள் ஏற்படுத்திய நவ பாஷான முருகன் சிலை உள்ளது. ஆனால் இந்த சிலைபாழடைந்து வருவதாகக் கூறி காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆலோசனையின் பேரில், புதிய பஞ்சலோக சிலையைதமிழக அரசின் இந்து அறநிலையத்துறை நிறுவியுள்ளது.
இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பக்தர்களின் உணர்வை மதிக்காமல் ஆகவ விதிகளைமீறி, காஞ்சி மடத்தின் உத்தரவால் இந்து அறநிலையத்துறை இந்த பஞ்சலோக சிலையை வைத்துள்ளதாகக் கூறிபல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில் சென்னை வடபழனியைச் சேர்ந்த வடபழனி சித்தர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், பக்தர்களின் ஆன்மீக உணர்வை அவமதிக்கும் வகையில் இந்தபஞ்சலோக சிலை வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் உணர்வுகளை தமிழக அரசு புண்படுத்தி விட்டது.
எனவே புதிய பஞ்சலோக சிலையை உடனடியாக அகற்ற உத்தரவிடுமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவைதலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கண்ணதாசன் ஆகியோர் இன்று விசாரித்தனர். அப்போது, 3மாதங்களுக்குள் இது தொடர்பாக பரிசீலித்து உரிய முடிவை எடுக்குமாறு இந்து அறநிலையத்துறைக்குஉத்தரவிட்டுள்ளனர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications