கொடும்பாவி எரிப்பு- ஆர்ப்பாட்டம்: தமிழகம் முழுவதும் காங்கிரசார் கைது
சென்னை:
வேட்பாளர்கள் தேர்வை எதிர்த்து, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய வாசன் கோஷ்டியைச் சேர்ந்தகாங்கிரசார் சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாசனின் பரிந்துரையை நிராகரித்து மற்ற அணியினருக்கு அதிக இடங்களை காங்கிரஸ் மேலிடம் ஒதுக்கியதால்கோபமடைந்த அவரது ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
நேற்றிரவு சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கமல்நாத்தின் கொடும்பாவியை காங்கிரசார்எரித்தனர். இன்று இந்தப் போராட்டம் தமிழகம் முழுமைக்கும் பரவியது.
இந் நிலையில் இன்று மதுரை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கமல்நாத்தின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. வடசென்னையில் ராயபுரம் மனோ தலைமையில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளங்கோவனுக்கு கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து ஈரோட்டில் வாசனின்ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். இவர்களில் 25 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போலகோபியில் போராட்டம் நடத்திய 20 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாராபுரத்தில் கொடும்பாவி எரிப்பில் ஈடுபட்ட 15 பேரும் கைதாகியுள்ளனர்.
இதே போல கோயம்புத்தூர், விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி, கரூர், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தாராபுரம்ஆகிய இடங்களிலும் வாசனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் தீக்குளிக்கப் போவதாகவும்மிரட்டினர்.
இந் நிலையில் தமிழக நிர்வாகிகளுடன் இன்று தொலைபேசியில் பேசிய வாசன், உண்மையான காங்கிரசாருக்கு சீட்மறுக்கப்பட்டது குறித்து சோனியாவிடம் பேசுவேன், புதிய பட்டியல் விரைவில் வெளியாகும், இனி எக்காரணம்கொண்டும் கமல்நாத்துடன் வேட்பாளர் தேர்வு குறித்துப் பேச மாட்டேன் என்று கூறியுள்ளார்.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications