சேலம்: ரஜினி ரசிகர் மன்ற தலைவருடன் அதிமுக வேட்பாளர் சந்திப்பு
சேலம்:
சேலம் தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்குமாறு சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவருக்குஅதிமுக வேட்பாளர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
சேலம் தொகுதியில் அதிமுக சார்பில் ராஜசேகரன் போட்டியிடுகிறார். இங்கு பாமக போட்டியிடுகிறது. பாமகபோட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சியை தோற்கடிக்குமாறும், அந்தத் தொகுதிகளில் போட்டியிடும் முக்கியவேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்குமாறும் தனது ரசிகர்களுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளதாகசெய்திகள் தினசரி வெளியாகிக் கொண்டுள்ளன.
இந் நிலையில் சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சக்திவேல் வீட்டுக்கு திடீரென்று அதிமுக வேட்பாளர்ராஜசேகரன் வந்தார். சக்திவேலிடம் பேசிய அவர் தனக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக விவாதித்து முடிவெடுப்பதாக சக்திவேல் அவரிடம் தெரிவித்தார்.
சேலம் தொகுதியில் கடந்த முறை அதிமுக சார்பில் செல்வகணபதி போட்டியிட்டார். ஆனால் இம்முறை அவருக்குமுதல்வர் ஜெயலலிதா சீட் கொடுக்கவில்லை. இதனால் செல்வகணபதியின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில்உள்ளனர். அவர்கள் காலை வாரி விட்டுவிடுவார்கள் என்று பயந்துபோய் தான் அம்மாவின் எதிரியானரஜினியின் ஆதரவைக் கோரி உள்ளார் வேட்பாளர் ராஜசேகரன்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications