ரஜினி கையில் இரட்டை இலை!
சென்னை:
பாமக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அக்கட்சியை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக, பாஜகவை ஆதப்பதாகரஜினிகாந்த் பகிரங்கமாக அறிவித்துள்ளதையடுத்து ரஜனி கையில் இரட்டை இலையும் தாமரையும் இருக்கும்படங்களுடன் பிரசாரத்தில் இறங்கிவிட்டனர் பாஜகவினரும், அதிமுகவினரும்.
இந்த 6 தொகுதிகள் தவிர திமுகவுடன் மோதும் இடங்களிலும் கூட பா.ஜ.கவினர் ரஜினி படத்தை போட்டு ஓட்டுகேட்க ஆரம்பித்துள்ளனர்.
பாபா பட படுதோல்வி மற்றும் அதுதொடர்பாக ஏற்பட்ட கலாட்டாக்களால் பாமக மீது கடும் கடுப்புடன் இருந்துவந்த ரஜினிகாந்த் தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்கிறேன் என்று நெய்வேலி திரைப்படக் கலைஞர்கள்போராட்டத்தின்போது கூறியிருந்தார்.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பணிகள் தொடங்கி பல நாட்கள் ஆகியும் அவரது ஆதரவு யாருக்குஎன்று தெரியாமல் ரசிகர்கள் மண்டை காய்ந்து போய்க் கிடந்தனர். பல கட்சியினரும் ஆளாளுக்கு தனக்கு ரஜினிபோன் செய்ததாகக் கூறிக் கொண்டனர்.
இந் நிலையில் ரஜினியின் நிழலாக கருதப்படும் கர்நாடகத்தைச் சேர்ந்த சத்யநாராயண ராவ், பாண்டிச்சேரியில்நடந்த ரசிகர் மன்ற கூட்டத்தில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் பாஜக அதிமுகவுக்கு ரஜினி ஆதரவுதெரிவித்துள்ளதாக அறிவித்தார்.
இதையடுத்து ஒரு பிரிவு ரசிகர்களும், அவர்களை விட அதிமுக, பாஜகவினரும் படு உற்சாகமடைந்துள்ளனர். ஒருபக்கம் ரஜினியின் கொடும்பாவியை ஒரு பிரிவினர் எரித்தாலும் இன்னொரு பிரிவினர் ரஜினியின் உத்தரவைஏற்று சுறுசுறுப்பாக தங்களது போஸ்டர் ஒட்டுவது, பேனர் மாட்டுவது, தட்டி வைப்பது போன்ற வேலைகளைசெய்யத் தொடங்கி விட்டனர்.
சுவர் விளம்பரங்களிலும் ரஜினி தென்பட ஆரம்பித்துவிட்டார். இந்த விளம்பரங்களில், ஒரு கையில் இரட்டைஇலையும் இன்னொரு கையில் தாமரையுமாக வினோதமாகக் காட்சியளிக்கிறார் ரஜினி. அதிமுக, பா.ஜ.கவினர்தெருக்களில் பிரச்சாரம் செய்யப் போகும்போது முன்னால் போகும் ஆட்டோக்களில் ரஜினி பாட்டு அலறஆரம்பித்துவிட்டது.
இனி அதிமுக, பா.ஜ.க. பொதுக் கூட்டங்களில் ரஜினி டான்சும் இடம் பெறவுள்ளது. ரஜினியைப் போலவேஇருக்கும் ஆசாமிகளைத் தேடிப் பிடித்து கூலிங்கிளாஸ், பேக் மாட்டிவிட்டு டான்ஸ் ஆட வைக்கவும்திட்டமிட்டப்பட்டுள்லது.
ரஜினியின் ஆதரவு அறிவிக்கப்படாத வட சென்னை (இங்கு பாஜக-திமுக நேரடி மோதல் நிலவுகிறது)தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளிலும் கூட ரஜினி படத்துடன் கூடிய சுவர் விளம்பரங்கள் பாஜக வேட்பாளர்சுகுமாறன் நம்பியாரை ஆதரித்து எழுதப்பட்டுள்ளது.
6 தொகுதிகளில் குறிப்பாக பாண்டிச்சேரியில்தான் ரஜினி ரசிகர்களும், பாஜகவினரும் படு உற்சாகமாக களம்இறங்கியுள்ளனர். வேட்பாளர் லலிதா குமாரமங்கலம் தனது காரில் பாஜக, அதிமுக கொடிகளுடன், ரஜினி ரசிகர்மன்ற கொடியையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு சுற்றி வருகிறார்.
பிரசாரத்தின்போது பாபா முத்திரையைக் காட்டவும் அவர் தவறுவதில்லை. அவர் பாஜக வேட்பாளரா அல்லதுரஜினி ரசிகர் மன்ற வேட்பாளரா என்று சந்தேகம் அளவுக்கு ரொம்ப ஓவராகவே போகிறார் லலிதா.
ரஜினியின் ஆதரவு குறித்து பா.ஜ.க. நன்றி தெரிவித்துவிட்ட நிலையில், இதுவரை அதிமுக தரப்பிலிருந்து கருத்துஏதும் வெளியாகவில்லை. இருந்தாலும் ரஜினியை பயன்படுத்தும் வேலைகளை அதிமுகவினர்ஆரம்பித்துவிட்டனர்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications