பேப்பரே படிக்காதீங்க: பா.ம.கவினருக்கு ராமதாஸ் கட்டளை
காஞ்சிபுரம்:
தேர்தல் முடியும் வரை ஒரு பேப்பரையும் (செய்தித் தாள்களை) படிக்கக் கூடாது என்று பாமக தொண்டர்களுக்குஅக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்டளை இட்டுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் வழக்கமாகவே பத்திரிக்கையாளர்களை பக்கத்தில் அண்ட விட மாட்டார். தீ பறக்கும்வார்த்தைகளால் கடுமையாக விமர்சிக்கும் பழக்கம் உடைய அவர் பல சமயங்களில் ஒருமையில்தான்பத்திரிக்கையாளர்களையே அழைப்பார், சில சமயங்களில் திட்டவும் செய்வார்.
சமீபத்தில் வைகோ வீட்டிற்குச் சென்று விட்டு திரும்பி வந்த அவரிடம், புதுவை தொகுதியை காங்கிரஸுக்குவிட்டுக் கொடுப்பீர்களா என்று ஒரு நிருபர் கேட்டபோது கடும் ஆத்திரமடைந்த அவர், உனக்கு வேறு வேலையேஇல்லையா? முடிஞ்சு போன விஷயத்தை திரும்பத் திரும்ப கேட்டுக்கினே கீறே என்று மெட்ராஸ் பாஷையில்கோபமாக சத்தம் போட்டுவிட்டுப் போனார்.
அவருடன் இருந்த வைகோவே இதனால் அதிர்ச்சியடைந்தார். அத்தோடு நிற்காத ராமதாஸ் தொடர்ந்து நிருபரைப்பார்த்து முனுமுனுத்தபடியே காரில் போய் ஏறினார்.
பத்திரிக்கைகள் மீதும், செய்தியாளர்கள் மீதும் இவ்வளவு "அன்பு" வைத்திருக்கும் ராமதாஸ், தற்போது,பத்திரிகைகளையே படிக்காதீர்கள் என்று தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் நடந்தசெயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர்,
மே மாதம் டியும் வரை (அதாவது தேர்தல் நடந்து முடியும் வரை) ஒரு பேப்பரையும் படிக்காதே. அப்படியே படிக்கவேண்டும் என்று நினைத்தால், முரசொலியைப் படி. தீக்கதிர் கூட படிக்கலாம் என்று கட்டளையிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், பா.ஜ.க. கட்சியால் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. மதத்தின் பெயரால்அரசியல் செய்யக்கூடாது. நாங்கள் அவர்களுடன் இருந்தவரை மதவாதம் தலைதூக்காமல் பார்த்துக்கொண்டோம். மெகா கூட்டணி என்ற அலட்சியத்தில் இருந்து விடக்கூடாது. கூட்டணிக் கட்சியினர் அனைவரும்ஒருங்கிணைந்து கடுமையாக உழைத்தால்தான், அதிமுகவின் மக்கள் விரோத ஆட்சியை எதிர்த்து பெரியவெற்றியைப் பெற முடியும் என்றார்.
கருணாநிதி- ராமதாஸ் சந்திப்பு:
பின்னர் சென்னை வந்த ராமதாஸ், கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். 30 நிமிடங்கள் நீடித்தஇந்தச் சந்திப்பில், மக்களவைத் தேர்தலில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், இனிமேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக பா.ம.க. வெளியிட்டசெய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இருவருமே ரஜினி விவகாரம் குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications