ஜெயாவைப் போய் அம்மா என்று அழைக்கலாமா?: வைகோ
பொள்ளாச்சி:
தாய் என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்த தமிழன், தரங்கெட்ட ஜெயலலிதாவைப் போய் அம்மா என்றுஅழைத்து தாயைக் கேவலப்படுத்தலாமா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்.
பொள்ளாச்சியில் மதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணனுக்கு ஆதரவாக அவர் பேசியதாவது:
ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து மாத்திரமல்ல.. தமிழக அரசியலில் இருந்தே வேரோடும், வேரடிமண்ணோடும் அகற்ற வேண்டும். அந்த வேலையை தொடர்ந்து செய்வேன். மக்கள் பிரச்சனைகளை முன் வைத்துநான் பேசியதால், தனது அரசு ஆட்டம் கண்டுவிடும் என்று பயந்து போன ஜெயலலிதா என் மீது பொய் கேஸ்போட்டு பொடாவில் உள்ளே தள்ளினார்.
காட்டில் சுதந்திரமாக உலாவும் சிறுத்தையை கூண்டில் அடைத்தால், அது வெளியே வந்து என்ன பண்ணும்என்பதை உணராமல் ஜெயலலிதா என்னை சிறையில் போட்டுவிட்டார்.
வைகோ என்றும் வன்முறைக்குத் துணை போக மாட்டான். மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை கொண்டவன் நான்.அதிகாரம் கையில் இருப்பதால் கொக்கரிக்கும் முதல்வர் ஜெயலலிதா அவர்களே.. உங்களை எச்சரிக்கிறேன்.ஜாக்கிரதையாகப் பேசுங்கள். நாட்டின் மதிப்பு வாய்ந்த தலைவர்களான சோனியா போன்றவர்களை தரம் கெட்டமுறையில் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கூட்டங்களுக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுகின்றனர். இந்த மக்கள்சக்திக்கு முன் நீங்கள் காசு கொடுத்து சேர்க்கும் கூட்டம் தாக்கு பிடிக்காது. அப்படிப்பட்ட நிலை தமிழகத்தில்உருவாகி விடக் கூடாது என்பதற்காகவே எச்சரிக்கிறேன். ஐ வார்ன் யூ ஜெயலலிதா. இது என் கடைசி எச்சரிக்கை.
கணவனை இழந்த சகோதரிகளை தமிழகத்தில் மனிதாபிமானத்தோடு வணங்குகிற கலாச்சாரம் கொண்டவன்தமிழன். அவர்களை இந்த மண் புண்படுத்ததாது. அப்படிப்பட்ட அம்மையார் சோனியாவை, கணவருக்குதுரோகம் செய்துவிட்டதாகப் பேசுவது எவ்வளவு கீழ்த்தரமானது.
ஜெயலிலாதாவின் இந்த வார்த்தைகள் தமிழ் கலாச்சார வார்த்தைகள் அல்ல. அவை தமிழ்ப் பண்பாட்டின்வார்த்தைகள் அல்ல. கடந்த காலங்களில் சினிமா சூட்டிங்குகளில் எழுதிக் கொடுத்த வசனத்தை திரும்பத் திருப்பப்பேசிப் பழக்கப்பட்ட ஜெயலலிதா இப்போது யாரோ எழுதித் தந்ததை மேடைகளில் ஓட்டை ரெக்கார்டு மாதிரிபேசிக் கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா அவர்களே.. உங்கள் பழைய வரலாற்றை பேச ஆரம்பித்தால் மேடை நாகரீகம் கெட்டுப் போகும்.அந்தத் தவறை நான் எப்போதும் செய்ய மாட்டேன். குமுத்ததில் வெளி வந்த உங்கள் வரலாற்றை காப்பி போட்டுமக்களிடம் கொடுத்தால் என்ன ஆகும்?
இது உங்களுடைய கடைசி அத்தியாயம். அரசியலில் அஸ்தமிக்கப் போவதால் வாய் மீறி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எம்.ஜி.ஆர். உருவாக்கிய சின்னம் கையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக திராவிடஇயக்கத்தை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
தாய் என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்தவன் தமிழன். அப்படிப்பட்ட தமிழர்கள் தரங்கெட்ட ஜெயலலிதாவைப்போய் அம்மா என்று அழைத்து தாயைக் கேவலப்படுத்தலாமா? இதைத் தமிழன் சிந்திக்க வேண்டும்.கலாச்சாரத்தையே கேவலப்படுத்தும் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டுவோம் என்றார் வைகோ.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications