பட்டையை கிளப்பும் படையப்பா!
சென்னை:
அதிமுக, பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ள ரஜினி ரசிகர்கள், ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட்துதிப் பாடல்களை வீதியெங்கும் முழங்க விட்டுள்ளனர்.
பாமக போட்டியிடும் 6 தொகுதிகளில் அதிமுக, பா.ஜ.கவுக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் களத்தில் குதித்துள்ளனர்.இந்தத் தொகுதிகளில் இரு கட்சியினரோடும் இணையாமல் தனியாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.
ரஜினி ஸ்டைலில் சுறுசுறுப்பாக பிரசாரத்தை மேற்கொள்ளும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய துணையாக இருப்பதுரஜினிகாந்த்தின் சூப்பர்ஹிட் பாடல்கள்தான். அந்தக் காலத்து பொல்லாதவன் படம் முதல் லேட்டஸ்ட் பாபா வரைஒவ்வொரு படத்திலும் வரும் ரஜினியின் தனிப் பாடல்களை (குறிப்பாக மக்களை குறி வைத்தும், தனதுபெருமையை உணர்த்தும் வகையிலும் உள்ள பாடல்களை) தேர்ந்தெடுத்து ஒலிக்கச் செய்து பட்டையைக்கிளப்புகிறார்கள்.
நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன், என் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா போன்ற சுய பெருமைகூறும் பாடல்கள்தான் பிரசார களத்தில் அதிகம் ஒலிக்கின்றன.
எம்.ஜி.ஆர் பாணியில் தனது ஒவ்வொரு படத்திலும் ஒரு சுய பெருமை பாடலை ரஜினிகாந்த் சேர்த்தது இப்போதுரொம்பவும் உதவியாக உள்ளதாக ரசிகர்கள் சந்தோஷமாகக் கூறுகிறார்கள்.
ரஜினி அலை அடிப்பதைப் பார்த்த ஆடியோ கேசட்காரர்கள், ரஜினியின் சூப்பர் ஹிட் பாடல்கள் அடங்கியகேசட்டுகளை அதிக அளவில் மார்க்கெட்டில் புழங்க விட்டிருக்கிறார்கள். விற்பனையும் சூப்பராம்!
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!!
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications