மக்களிடம் இருந்து தப்பிய அமைச்சர் செம்மலை: மாட்டிக் கொண்ட அதிமுக வேட்பாளர்
சேலம்:
வாக்கு சேகரிக்கச் சென்ற சேலம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரனை பெண்கள் சுற்றி வளைத்துகடுமையாக வாக்குவாதம் செய்து திருப்பி விரட்டியடித்தனர். இச் சம்பவம் நடக்க இருப்பதைஅறிந்த அமைச்சர் செம்மலை பாதி வழியிலேயே பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு ஓடிவிட்டார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செம்மலை அந்தத் தொகுதியின் வேட்பாளர் ராஜசேகருடன்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனது சொந்தத் தொகுதியான ஓமலூரில் வாக்கு சேகரிக்க ராஜசேகரனை அழைத்துக் கொண்டுதிறந்த ஜீப்பில் கிளம்பினார் செம்மலை. ஆனால், தொகுதிக்கு செம்மலை ஏதும் செய்யாததால் அவர்மீது கடுப்பில் உள்ள அப் பகுதி மக்கள் அமைச்சரை முற்றுகையிடத் தயாராயினர்.
மேட்டுப் பகுதி என்ற இடத்தில் பெண்களும் ஆண்களுமாக நூற்றுக்கணக்கில் திரண்டனர்.
இது குறித்து அமைச்சருக்கு அவரது ஆட்கள் செல்போனில் தகவல் தந்தனர். இதையடுத்துகரும்பாலை பகுதியிலேயே ஜீப்பில் இருந்து இறங்கிவிட்ட செம்மலை, வேட்பாளர் ராஜசேகரனைமட்டும் வாக்கு சேகரிக்க அனுப்பி வைத்துவிட்டு ஓடிவிட்டார்.
விவரம் தெரியாமல் மேட்டுப் பகுதிக்குள் நுழைந்த ராஜசேகரனின் ஜீப்பை பெண்கள் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். எங்கேயா உங்க அமைச்சர்? என்று கேட்க, பதில் சொல்ல முடியாமல்ராஜசேகரன் தவியாய் தவித்தார்.
தொகுதிக்கு எதுவும் செய்யாத செம்மலை கட்சியை சேர்ந்த உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம்.எங்கள் பகுதிக்குள் நுழையாமல் திரும்பிப் போய்விடுங்கள் என்றனர்.
உடனே ராஜசேகரனுக்கு ஆதரவாக உடன் வந்த அதிமுகவினர் குரல் எழுப்பினர். இதையடுத்துஅங்கு திரண்டிருந்த ஆண்கள் முன்னேறி வந்து அதிமுகவினரின் சட்டைகளைப் பிடிக்க, உடனேஜீப்பைத் திருப்பச் சொல்லி தப்பி ஓடினார் ராஜசேகரன்.
அமைச்சர் செம்மலை அப் பகுதி வந்திருந்தால் பெரும் ரசாபாசம் நடந்திருக்கும் என்பது மட்டும்உறுதி. பாதியிலேயே அவர் திரும்பிவிட்டதால் தப்பிவிட்டார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications