ரஜினி விவகாரம்: ராமதாஸ் மீதான வழக்கை வாபஸ் பெற கருணாநிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ராமதாஸ் மீது போடப்பட்டுள்ள கொலைமுயற்சி வழக்கை வாபஸ் பெற வேண்டும் என திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிகோரியுள்ளது.

இந்தக் கூட்டணியின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதி தலைமையில்நடந்தது. இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் செயலாளர் வரதராஜன், மதிமுக பொருளாளர்கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் ரஜினி ரசிகர்களுக்கும், பாமகவினருக்கும் இடையில் வெடித்துள்ள மோதல் குறித்தே முக்கியமாகவிவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,

தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யகாவல்துறை தவறி விட்டது. மேலும், தேர்தல் நேரத்தில் கருப்புக் கொடி போராட்டம் நடத்துவதும் தவறானதாகும்.கருப்புக் கொடி காட்ட அனுமதித்த மதுரை காவல்துறையிரின் செயல் அப்பட்டமான தேர்தல் விதி மீறலாகும்.

மதுரையில் நடந்த சம்பவம், ரஜினி ரசிகர்கள் என்ற பெரியல் அதிமுகவினரும், காவல் துறையினரும் சேர்ந்துதிட்டமிட்டு நடத்திய செயலாகும். இது ஒரு திட்டமிட்ட சதிச் செயல் என்றே கருதுகிறோம்.

தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு இதுபோன்ற செயல்களைத் தடுத்து நிறுத்தி அரசியல் தலைவர்களுக்குஉரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.

ராமதாஸின் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே, கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார்அனுமதி கொடுத்தது ஏன்? வன்முறையைத் தூண்டவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே போலீஸார்அனுமதியளித்துள்ளனர்.

பத்திரிக்கையாளர்களும் இந்த மோதலின்போது தாக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். பாமகதலைவர் ஜி.கே.மணியும் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ராமதாஸ் உள்ளிட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை போலீஸார் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று இக்கூட்டத்தின் மூலம் கோரிக்கை விடுக்கிறோம்.

தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்த பின்பும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீதான தனிநபர்விமர்சனத்தை முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து செய்து வருகிறார். இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைஎடுப்பது குறித்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணி விரைவில் கூடி முடிவெடுக்கும் என்றார் கருணாநிதி.

பின்னர் கருணாநிதியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் தந்த பதில்களும்:

நிருபர்: ராமதாஸ் விவகாரம் தொடர்பாக ரஜினியை சந்தித்துப் பேசுவீர்களா?

கருணாநிதி: சந்தித்தால் பேசுவேன்

நிருபர்: ராமதாசின் செயல் ராட்சஷ செயல் என்று ரஜினி கூறியிருக்கிறாரே?

கருணாநிதி: அப்படியா.. அது குறித்து ஏதும் சொல்வதற்கில்லை.

நிருபர்: ரஜினி உங்கள் மீது வருத்தமாய் இருக்கிறாராமே?

கருணாநிதி: உங்களிடம் ரஜினி அப்படி சொன்னாரா?

நிருபர்: தனது நிலையை விரைவில் வெளியிடுவேன் என்று ரஜினி கூறியிருக்கிறாரே? இதனால் உங்கள்கூட்டணியின் வெற்றி பாதிக்குமா?

கருணாநிதி: எங்கள் கூட்டணி பாதிக்கப்பட வேண்டும் என்று அவரே நினைக்க மாட்டார். உங்களை மாதிரியாருக்கும் பாதகம் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவரல்ல அவர்.

நிருபர்: பாபா விவகாரத்தின்போது ராமதாஸை நீங்கள் கண்டிக்கவில்லை என்று ரஜினி வருத்தபட்டாராமே?

கருணாநிதி: அப்படியா?. உங்ககிட்ட ரஜினி அப்படி சொன்னாரா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+