மதுரை: மனைவி, மகன், மகளை சுட்டுக்கொன்று டி.எஸ்.பி. தற்கொலை
மதுரை:
மதுரையில், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தனது மனைவி, மகள், மகன் ஆகியோரை துப்பாக்கியால்சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்ட ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) இருந்தவர் எபனேசர் (48). இவரது வீடுமதுரை ஆத்திகுளம் நேரு நகரில் உள்ளது. இன்று காலை 6.45 மணியளவில் அவரது வீட்டிலிருந்து ரிவால்வர்துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்கவே அக்கம் பக்கத்தினர் ஓடிப் போய் பார்த்தனர்.
அப்போது எபனேசர், அவரது மனைவி திலகவதி (45), மகன் பால் ஜெபதுரை (14), மகள் ஏஞ்சல் பாத்திமா (12)ஆகியோர் ரத்த வெள்ளத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கிடந்தனர்.
உடனடியாக போலீஸாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவிக்கவே, அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோதுஎபனேசர், திலகவதி, பால் ஜெபதுரை ஆகியோர் தலையில் குண்டடிபட்டு இறந்து போயிருந்தனர்.
நெற்றிப் பொட்டில் குண்டடி பட்டு ஏஞ்சல் பாத்திமா உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை உடனடியாகபோலீசார் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சைபலனின்றி அவர் இறந்து விட்டார்.
இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் எபனேசர் டி.எஸ்.பி.யாகபதவி உயர்வு பெற்றார். டி.எஸ்.பியான பின் நேற்றுதான் தனது முதல் மாத சம்பளத்தையும் வாங்கியிருந்தார்.
எபனேசர் சொந்த ஊர் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி ஆகும். இவரது மைத்துனர் மகன் ஷ்யாம்மதுரையில் இவரது வீட்டில் தான் தங்கிப் படித்து வருகிறார். எபனேசரின் அக்கா மகன் பாபு (24) மதுரையில்தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் எபனேசரின் வீட்டில்தான் தங்கி இருக்கிறார்.
முன் அறையில் தூங்கிக் கொண்டிருந்த பாபுவையும், ஷ்யாமையும் எபனேசர் சுடவில்லை. தனது குடும்பத்தினரைமட்டுமே கொன்றுள்ளார். எனவே குடும்பப் பிரச்சனை தான் இதற்குக் காரணமாக இருக்க வேண்டும் எனபோலீசார் கருதுகின்றனர்.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் தென் மண்டல டிஐஜி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications