தேர்தல் விதிமீறல்: திமுகவுக்கு தடை விதிக்க அதிமுக கோரிக்கை
சென்னை:
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்ட திமுக, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல்ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக தேர்தல் செலவுகளுக்காக ரூ.25 கோடி நிதி திரட்டியதாகவும், வேட்பாளர்களிடம்ரூ.60 லட்சம் டெபாஸிட் கட்ட வற்புறுத்தியதாகவும் திமுக மீது அதிமுக தேர்தல் ஆணையத்திடம் புகார்தெரிவித்துள்ள.
இந் நிலையில் இது தொடர்பாக அதிமுக பொருளாளர் சீனிவாசன் தேர்தல் ஆணையத்திடம் இரண்டாவதாக ஒருமனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தேர்தல் நடத்தை விதிமுறைகளை திமுக மீறியது தொடர்பாக அதிமுக கூறிய புகார்களுக்கு கருணாநிதி அளித்தபதில் நம்பும்படியாக இல்லை.
கருணாநிதி தனது அறிக்கையில், திமுக பொதுக்குழுவில் இந்த மக்களவைத் தேர்தலுக்கு மட்டுமில்லாமல் இனிவரும் எல்லா தேர்தலுக்கும் சேர்த்து தான் நிதி திரட்டப்பட்டது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறிஇருக்கிறார்.
ஆனால் 2004 மக்களவைத் தேர்தலுக்காகத்தான் குறைந்தது ரூ.25 கோடி நிதி திரட்ட வேண்டும் என்று திமுகதீர்மானம் போட்டதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தரப்புமக்களிடமும் தீவிர நிதி வசூல் செய்துள்ளனர்.
நிதி கொடுக்காதவர்களை மிரட்டியுள்ளனர். கடைகள் சூறையாடியுள்னர். தேர்தல் நிதி வசூல் ரூ.30 கோடியைதாண்டி இருக்கிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
தேர்தலில் போட்டியிட சீட் கேட்கும் வேட்பாளர் ரூ. 60 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதுதொடர்பான புகாருக்கும் கருணாநிதி உரிய பதில் அளிக்கவில்லை.
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஆலடி அருணாவே தலைமை தன்னிடம் டெபாசிட் கேட்டு வற்புறுத்தியதாகக் கூறிஇருக்கிறார். ரூ.30 லட்சத்தை டிமாண்ட் டிராப்ட் எடுத்ததாகவும், மீதி ரூ.30 லட்சத்தை ரொக்கமாக டெபாசிட்செய்ததாகவும் அவர் கூறி இருக்கிறார்.
இதுபற்றியும் தேர்தல் ஆணையம் விரிவான விசாரணை நடத்த வேண்டும். தேர்தல் விதிகளை மீறிய திமுகதேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications