மதுரை சம்பவம்: 7 பா.ம.க. தொண்டர்கள் கைது
மதுரை:
மதுரையில் ரஜினி ரசிகர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாமகவினர் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மோகனைஆதரித்துப் பேச பாமக நிறுவனர் ராமதாஸ் வந்தபோது, ரஜினி ரசிகர்கள் சிலர் அவருக்கு கறுப்புக் கொடி காட்டமுயன்றனர்.
அப்போது ராமதாஸுடன் வந்த பாமகவினர் ரஜினி ரசிகர்களைத் தாக்கினர். இதில் ரஜினி ரசிகர் மன்றத்தைச்சேர்ந்த வழக்கறிஞர்கள் மணவாளன், சிங்கராஜ் உள்ளிட்ட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக விளக்குத்தூண் காவல் நிலையத்தில் ராமதாஸ் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 25 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந் நிலையில் பாமகவின் மதுரை நகர் இளைஞரணித் தலைவர் இருளப்பன், மாவட்ட தொண்டரணித் தலைவர்சிவா, தொண்டரணிச் செயலர் சசிகுமார், தொண்டரணி பொருளாளர் முருகன், தொண்டர்கள் பார்த்திபன்,ஆனந்தகுமார், சுகுமாரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications